ARTICLE AD BOX
நம் வீட்டில் நேர்மறையான ஆற்றல் மற்றும் தெய்வீக சக்தியை நிலைக்க செய்ய வேண்டும் என்றால் அதற்காக சில பொருட்களை வீட்டில் அன்றாட பயன்படுத்த வேண்டியது அவசியமாகும். அந்த பொருட்கள் என்னவென்பதைப் பற்றி இந்தப் பதிவில் காண்போம்.
1. பச்சை கற்பூரம்
பச்சை கற்பூரத்தை உணவு சீக்கிரம் கெட்டுப்போகாமல் இருக்க உபயோகப் படுத்துவார்கள். இது நல்ல வாசனை தரக்கூடிய பொருளாகும். தினமும் விளக்கேற்றி வழிப்பாடு செய்பவர்கள் பச்சை கற்பூரத்தை விளக்கில் பொடியாக்கி போட்டு வழிப்பட்டால், பச்சை கற்பூரத்தின் நறுமணம் வீடு முழுவதும் பரவியிருக்கும் போது அதற்கு இறை சக்தியை ஈக்கக்கூடிய ஆற்றல் உண்டு.
2. ஏலக்காய்
ஏலக்காயை உங்களுடைய இஷ்ட தெய்வத்திற்கு மாலையாக போட்டு வழிப்பாடு செய்வதால், அந்த தெய்வத்தை வசியப்படுத்தும் ஆற்றல் ஏலக்காய்க்கு உண்டு என்று சொல்லப்படுகிறது. தொழில் செய்யும் இடம், வீடு ஆகிய இடங்களில் தெய்வத்திற்கு ஏலக்காய் மாலை போட்டு வழிப்படுவதால் அற்புதமான பலன்கள் கிடைக்கும். செல்வ செழிப்பை அதிகரிப்பதாக சொல்லப்படுகிறது.
3. கிராம்பு
ஒற்றை எண்ணிக்கையில் கிராம்பை விளக்கில் போட்டு விளக்கேற்றினால் அற்புதமான பலன்கள் ஏற்படும். கிராம்பு என்பது உணவுக்கும், மருத்துவத்திற்கும் பயன்படுகிறது. கிராம்பு எண்ணெய் பல் வலியை குணமாக்க பயன்படுத்தப்படுகிறது. சமையலில் கிராம்பு நல்ல சுவையையும், நறுமணத்தையும் தருகிறது. கிராம்பை வைத்து வழிப்படுவதால் நல்ல முன்னேற்றமும், வல்லமையும், அதீத சக்தியையும் ஏற்படுத்திக் கொடுக்கும்.
4. ஜவ்வாது
நல்ல நறுமணம் தரக்கூடிய இயற்கையான முறையில் தயாரிக்கப்பட்ட ஜவ்வாதை வீட்டில் பயன்படுத்து நல்ல தெய்வீக சக்தி, இறையாற்றல், நல்ல எண்ணம் ஆகியவற்றை உருவாக்கும். ஜவ்வாதுவில் இருந்து வரும் வாசனை மனதிற்கு புத்துணர்ச்சியையும், நல்ல எண்ணத்தையும் தரும். இதன் வாசனை இறைசக்தியை வீட்டில் நிறைந்திருக்க செய்யும். பெரும்பாலும் அனைத்து கோவில்களிலும் ஜவ்வாதை பயன்படுத்துவார்கள். இதை தொடர்ந்து வீட்டில் பயன்படுத்துவதால் வீடே கோவிலாக மாறும்.
5. துளசி
வீட்டில் துளசி இருந்தால் அந்த வீட்டில் லக்ஷ்மி தேவியும், மகாவிஷ்ணுவும் வாசம் செய்வதாக அர்த்தம். தினமும் துளசியை பயன்படுத்தி பூஜை செய்வது மிகவும் நல்லதாகும். தினமும் துளசி மாடத்திற்கு பூஜை செய்வது நல்ல பலனைத் தரும். இந்த 5 பொருட்களையும் தினமும் வீட்டில் பயன்படுத்துவது இறைசக்தியை ஈர்க்கும் தன்மையைக் கொண்டது.