ARTICLE AD BOX
நாட்டில் கோடிக்கணக்கான குற்றவியல் வழக்குகள் நிலுவையில் இருப்பதாக நாடாளுமன்றத்தில் மத்திய சட்ட அமைச்சகம் தெரிவித்தது.
உச்சநீதிமன்றத்தில் மட்டும் 17,647 குற்றவியல் வழக்குகளும், உயர்நீதிமன்றங்களில் 18.3 லட்சம் வழக்குகளும், மாவட்ட மற்றும் கீழமை நீதிமன்றங்களில் 3.46 கோடி வழக்குகளும் நிலுவையில் இருப்பதாக மத்திய சட்ட அமைச்சகம் கூறியது.
அவற்றில், தமிழகத்தில் மட்டும் மாவட்ட மற்றும் கீழமை நீதிமன்றங்களில் 7.72 வழக்குகள், சாட்சியம் தொடர்பான நிலுவையில் உள்ளன.
இதையும் படிக்க: திருப்பதியில் ஹிந்துக்களுக்கு மட்டுமே வேலை: சந்திரபாபு நாயுடு அறிவிப்பு
இதனிடையே, திண்டிவனம் அருகே உள்ள சரசுவதி சட்டக் கல்லூரியில் தேசிய நியாய சன்ஹிதாவின் சட்ட அம்சங்கள் மற்றும் இந்திய குற்றவியல் நீதி அமைப்பின் தாக்கங்கள் குறித்த தேசிய மாநாடு இன்று நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழக துணை வேந்தர் சந்தோஷ்குமார் பேசியதாவது, ``இன்றைக்கு சட்ட வழக்குகளில் பலர் நியாயங்களை பெற்று வந்தாலும், குற்ற வழக்குகளில் இந்தியா முழுவதும் சரியான சாட்சியங்கள் இல்லாத காரணத்தினால் 70 முதல் 90 சதவிகித வழக்குகள்வரையில் தள்ளுபடி செய்யப்படுகின்றன.
இதனால், குற்றவாளிகள் தப்பித்தும் விடுகின்றனர். இதற்கு காரணம் சாட்சியங்களுக்கு பாதுகாப்பு இல்லாததுதான். தேசிய நியாய சன்ஹிதா சட்டம் பலருக்கு பாதுகாப்பு அளிக்கிறது’’ என்று தெரிவித்தார்.