குறைந்த விலையில் பிரியாணி சாப்பிடனுமா? இலங்கை யாழ்ப்பாணத்தில் அட்டகாசமான ஹோட்டல்

2 days ago
ARTICLE AD BOX

ஐபிசி தமிழ் சேனலில் தரமான சம்பவம் என்ற நிகழ்ச்சியின் மூலம் யாழ்ப்பாணத்தில் குறைந்த விலையில் தரமான பிரியாணி கிடைக்கும் உணவகத்தை குறித்து இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

பொதுவாக பிரியாணி என்றால் பிடிக்காது என்று எந்த அசைவ பிரியர்களும் கூறவே மாட்டார்கள். சிறு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் பிரியாணிக்கு அடிமையாகவே இருக்கின்றனர்.

அனைவரும் விரும்பி சாப்பிடுவதற்கு முக்கியமான காரணம் என்னவெனில் இதன் சுவை தான். இவ்வாறான தருணத்தில் இலங்கை யாழ்ப்பாணத்தில் குறைவான விலையில் கிடைக்கும் தரமான பிரியாணியை பற்றி காணொளியில் தெரிந்து கொள்ளலாம்.

எஸ்எஸ்ஏ கிராண்ட் (SSA Grand Restaurant) என்று பெயர் வைக்கப்பட்டுள்ள ஹோட்டலில் உணவுகள் தரமானதாகவும், சுவையானதாகவும் இருக்கின்றது.

அதிலும் பிரியாணி பிரியர்களுக்கு விதவிதமான பிரியாணிகளும் இங்கு கிடைக்கின்றது. மண்சட்டி பிரியாணி, ஹைத்ராபாத் பிரியாணி, மூங்கில் இறால் பிரியாணி பல வகைகளில் கொடுத்து வாடிக்கையாளர்களை அசத்தி வருகின்றனர்.

பிரியாணி மட்டுமின்றி கொத்து, ஃப்ரைடு ரைஸ் இவற்றின் சுவையும் தரமும் அட்டகாசம் என்று கூறலாம். எந்தவித கலப்படம் இல்லாமல் தயாரிக்கப்படும் இந்த உணவுகளின் விலையையும் காணொளியில் தெரிந்து கொள்ளலாம்.

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW     
Read Entire Article