ARTICLE AD BOX

சென்னை,
தமிழ் சினிமாவில் குறிப்பிடத்தக்க நடிகர்களில் ஒருவர் விமல். இவரது நடிப்பில் சமீபத்தில் வெளியான 'விலங்கு' வெப் தொடர் மற்றும் 'சார்' என்ற திரைபடமும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றன. இந்த நிலையில், இவர் தற்போது லட்சுமி கிரியேஷன்ஸ் சார்பில் தனது 34-வது படமான 'பரமசிவன் பாத்திமா' என்ற படத்தில் நடித்துள்ளார்.
இந்த படத்தை 'தமிழ்க்குடிமகன்' என்ற திரைப்படத்தை இயக்கி பாராட்டுக்களை பெற்ற இசக்கி கார்வண்ணன் இயக்கியுள்ளார். இப்படத்தில் விமல் கதாநாயகனாக நடிக்க அவருடன் இணைந்து கதாநாயகியாக சாயாதேவி நடித்துள்ளார். மேலும் இப்படத்தில் எம்.எஸ்.பாஸ்கர், மனோஜ் குமார், ஸ்ரீ ரஞ்சனி, ஆதிரா, அருள்தாஸ், கூல் சுரேஷ் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.
இந்த படம் காதலுக்கு மதங்கள் எவ்வாறு தடையாக நிற்கின்றன என்பது குறித்து பேசும் வகையில் உருவாகி வருகிறது. சமீபத்தில் இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை நடிகர் விஜய்சேதுபதி வெளியிட்டார். இந்த போஸ்டர் இணையத்தில் வைரலானது. அதனை தொடர்ந்து தற்போது இப்படத்தின் டிரெய்லர் குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதாவது இயக்குனர் இசக்கி கார்வண்ணன் படத்தின் புரோமோ வீடியோவை வெளியிட்டு டிரெய்லர் விரைவில் வெளியாகும் என்று தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். இதனால் இப்படத்தின் டிரெய்லரை எதிர்பார்த்து ரசிகர்கள் காத்து கொண்டுள்ளனர்.�