சிறார் ஆபாச வீடியோக்கள் இணையத்தில் பதிவேற்றும் குற்றங்கள் பன்மடங்காக அதிகரித்துள்ளதாக மத்திய உள்துறை அமைச்சகம் அதிர்ச்சி தகவலை தெரிவித்துள்ளது. கடந்த 2023ஆம் ஆண்டு, 2,957 குற்றங்கள் இதுதொடர்பாக தேசிய சைபர் கிரைம் குற்ற ஆவண காப்பகத்தில் பதிவாகியிருந்த நிலையில், 2024ஆம் ஆண்டு, இது 6,079ஆக அதிகரித்துள்ளது.

சிறார் ஆபாச வீடியோக்கள்:

பெண்கள், சிறார்களுக்கு எதிரான வன்முறை சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்தியாவில் மட்டுமின்றி உலக நாடுகள் முழுவதும் இந்த கொடூரம் அரங்கேறி வருகிறது. குறிப்பாக, சிறார்களுக்கு எதிராக நடக்கும் பாலியல் குற்றங்கள் சமூகத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. சிறார்களுக்கு எதிராக நடக்கும் பாலியல் குற்றங்களுக்கு இணையத்தில் பதிவேற்றப்படும் சிறார் ஆபாச வீடியோக்களே காரணம் என சொல்லப்படுகிறது.

இதை தடுக்க மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளது. இணையத்தில் சிறார் ஆபாச வீடியோக்களை பதிவேற்றினாலோ அல்லது பார்த்தாலோ கடும் குற்றமாக பார்க்கப்படுகிறது. இதற்கு, கடும் தண்டனை வழங்கப்படுகிறது.

அதிர்ச்சி ரிப்போர்ட் சொல்வது என்ன?

இருப்பினும், சிறார் ஆபாச வீடியோக்கள் இணையத்தில் பதிவேற்றுவது தொடர்ந்து அதிகரித்து வந்துள்ளது. இந்த நிலையில், இதுதொடர்பான அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. சிறார் ஆபாச வீடியோக்கள் இணையத்தில் பதிவேற்றும் குற்றங்கள் பன்மடங்காக அதிகரித்துள்ளதாக மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. சிறார் ஆபாச வீடியோக்கள் இணையத்தில் பதிவேற்றும் குற்றங்கள் பன்மடங்காக அதிகரித்துள்ளதாக மத்திய உள்துறை அமைச்சகம் அதிர்ச்சி தகவலை தெரிவித்துள்ளது.

கடந்த 2018ஆம் ஆண்டு, ஜம்மு காஷ்மீர் கத்துவாவில் எட்டு வயது பழங்குடியின சிறுமி கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டார். இந்த சம்பவம் நாட்டை உலுக்கி இருந்தது.

20 வயதுக்குட்பட்ட குறைந்தது 120 மில்லியன் சிறுமிகள் - சுமார் 10 பேரில் ஒருவர் - உடலுறவில் ஈடுபடவோ அல்லது பிற பாலியல் செயல்களில் ஈடுபடவோ கட்டாயப்படுத்தப்படுகிறார்கள் என ஐநா கூறுகிறது.

இருப்பினும் உண்மையான எண்ணிக்கை மிக அதிகமாக இருக்கலாம். கட்டாய பாலியல் உறவை புகாரளிக்கும் இளம் பருவப் பெண்களில் தோராயமாக 90 சதவீதம் பேர், தங்கள் முதல் குற்றவாளி தங்களுக்குத் தெரிந்த ஒருவர் என கூறுவதாக ஐநா தெரிவிக்கிறது.

இதையும் படிக்க: TNPSC Group 4: குரூப் 4 தேர்வர்களே உங்களுக்குத்தான்.. டிஎன்பிஎஸ்சி வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!