குரூப் 1 முதன்மைத் தேர்வு: டிஎன்பிஎஸ்சி வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு என்ன?

2 hours ago
ARTICLE AD BOX

தமிழக அரசில் ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வு-I இல் அடங்கிய பதவிகளுக்கு மூலச் சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் நேர்முகத் தேர்வுக்கான பட்டியலை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது.

2024 ஆம் ஆண்டிற்கான குரூப் 1 தேர்வு அறிவிப்பை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மார்ச் 28 ஆம் தேதி வெளியான நிலையில், 90 பணியிடங்களுக்கு முதல்நிலை தேர்வு ஜூலை 13 ஆம் தேதி நடத்தப்பட்டது. இந்த தேர்வை 1.59 லட்சம் பேர் எழுதினர்.

இவர்களுக்கான முதல்நிலை தேர்வுக்கான முடிவுகள் கடந்த செப்டம்பர் 2 ஆம் தேதி வெளியானது. அதில் 1,988 பேர் மட்டுமே தேர்ச்சி பெற்று, முதன்மை தேர்வுக்கு தகுதிபெற்றனர்.

இந்த நிலையில், தகுதிபெற்ற தேர்வர்களுக்கு 2024 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 10 முதல் 13 ஆம் தேதி வரை முதன்மைத் தேர்வு நடைபெற்றது. அதற்கான தோ்வு முடிவுகளை வெள்ளிக்கிழமை (மார்ச். 14) இரவு தனது அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியிட்டுள்ளது தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம். இதில் சுமார் 190 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

இவர்களுக்கான நேர்முகத் தேர்வு மற்றும் சான்றிதழ்கள் சரிபார்ப்பு வரும் ஏப்ரல் 7 முதல் 9 ஆம் நாள் வரை நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read Entire Article