கும்பமேளாவில் புரமோஷனை தொடங்கிய தமன்னா.. வேற லெவல் வீடியோ வைரல்..!

1 day ago
ARTICLE AD BOX

நடிகை தமன்னா நடித்த அடுத்த படத்தின் டீசர் வெளியாகியுள்ளது. இந்த டீசர், கும்பமேளாவில் வெளியிடப்பட்டிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழ், தெலுங்கு உட்பட தென்னிந்திய மொழிகளில் முன்னணி நடிகையாக இருக்கும் தமன்னா, தற்போது 'ஒடேலா 2’ என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். ஏற்கனவே, இந்த படத்தின் முதல் பாகம் 2022 ஆம் ஆண்டு வெளியாகி நல்ல வெற்றி பெற்ற நிலையில், தற்போது இதன் இரண்டாம் பாகத்தின் படப்பிடிப்பு முடிந்துவிட்டது. விரைவில் இந்த படம் ரிலீஸ் ஆக இருக்கிறது.

இந்நிலையில் இந்த படத்தின் சுமார் இரண்டு நிமிடங்கள் கொண்ட டீசரை, உத்தர பிரதேச மாநிலத்தில் கும்பமேளா நடைபெறும் பிரயாக்ராஜ் நகரில் படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். இந்த டீசர் வீடியோ தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

நீர், நெருப்பு, காற்று, ஆகாயம், நிலம் என ஐந்து பஞ்சபூதங்களையும் அடக்க நினைக்கும் தீய சக்தியை கட்டுப்படுத்தும் பெண் சாமியார் கதாபாத்திரத்தில், தமன்னா இந்த படத்தில் நடித்துள்ளார். ’ஒடேலா’ முதல் பாகம் போலவே, இரண்டாவது பாகமும் மிகப்பெரிய வெற்றி அடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Read Entire Article