கும்பத்தில் உதிக்கும் புதன் தீராத பண யோகத்தை முழுதாக அள்ளப்போகும் ராசிகள் எவை?

2 days ago
ARTICLE AD BOX

ஜோதிடத்தில் பல கிரக கணிப்புக்களை வைத்து ராசிகளின் பலன்களை தெளிவாக ஜோதிடர்கள் கணிப்பது வழக்கம். ஒவ்வொரு கிரகங்களும் தன் பெயர்ச்சியை ஆரம்பிக்கும் போதும் ஒவ்வொரு ராசிகளின் பலன்களும் அதனடன் சேர்ந்து பெயர்ச்சியடையும்.

புதன் பகவான் ஒரு மாதத்திற்கும் குறைவான நாட்களில் ராசி மாற்றத்தை செய்யக்கூடியவர். இவர் வருகின்ற பிப்ரவரி 25ஆம் தேதி அன்று கும்ப ராசியில் உதயமாக உள்ளார்.

நவக்கிரகங்களின் இளவரசனாக இருக்கும் புதன் பகவானின் இந்த மாற்றத்தால் அனைத்து ராசிகளும் தாக்கத்தை அனுபவிக்கும்.

புதன் பகவான் நரம்பு, படிப்பு, வியாபாரம், கல்வி உள்ளிட்டவைகளுக்கு காரணியாக திகழ்ந்து வருகின்றார். எனவே கும்பத்தில் வக்கிரமடையும் புதனால் எந்த ராசிகள் அதிஷ்டத்தை பெறப்போகின்றது என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.

ரிஷபம்
  • புதன் பகவானின் உதயம் உங்களுக்கு நிதி நிலைமையில் நல்ல யோகத்தை கொடுக்கப் போவதாக ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது.
  • குடும்பத்தில் இதுவரை பல பிரச்சனைகள் இருந்தவை எல்லாம் தற்போது இல்லாமல் போகும்.
  • உங்களுடைய காதல் வாழ்க்கை மிகவும் மகிழ்ச்சியாக இருக்கும்.
  • திருமணமாகாதவர்களுக்கு நல்ல வரன் தேடி வரும்.
  • தன்னம்பிக்கை மற்றும் தைரியம் அதிகரிக்கும் என கூறப்படுகிறது.
மிதுனம்
  • புதன் பகவானின் உதயம் உங்களுக்கு நல்ல யோகத்தை பெற்றுத் தரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
  • பல நல்ல செய்திகள் உங்களை வந்தடைவதுடன் பல வர்தக பயணங்கள்களை மேற்கொள்வீர்கள்.
  • தொழிலில் நீங்கள் நினைத்தவற்றை அடைய உங்களுக்கு அனைத்தும் சாதகமாக அமையும்.
  • தொலைதூர பயணங்கள் உங்களுக்கு சிறப்பான முன்னேற்றத்தை பெற்று திரும்ப எதிர்பார்க்கப்படுகிறது.
  • இந்த பெயர்ச்சியில் இருந்தே நீங்கள் உங்கள் கஷ்டங்கள் விலகும்.
சிம்மம்
  • புதன் பகவானின் உதயம் உங்களுக்கு நல்ல யோகத்தை பெற்று தரும்.
  • குடும்பத்தில் உங்களால் பல மகிழ்ச்சி தருணங்கள் நிகழும்.
  • புதிய முதலீடுகள் நல்ல லாபத்தை பெற்று தரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
  • பொருளாதாரத்தில் உங்களுக்கு நல்ல முன்னேற்றம் இருக்கும் என கூறப்படுகிறது.
  • பணத்தை அதிகமாக சேமிப்பீர்கள்.
  • காதல் திரமண வாழ்க்கை உங்களுக்கு சாதகமாக அமையும்.

 

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW 

இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).

Read Entire Article