கும்பகோணம் ஸ்பெஷல் வடகறி - கும்பகோணம் கடப்பா எப்படி செய்வதென்று பார்ப்போமா?

18 hours ago
ARTICLE AD BOX

கும்பகோணம் வடகறி:

கடலைப்பருப்பு 1/4 கிலோ

வெங்காயம் 2

தக்காளி 2

பச்சை மிளகாய் 1

இஞ்சி பூண்டு விழுது 1 ஸ்பூன்

மஞ்சள் தூள் 1/2 ஸ்பூன்

மிளகாய் தூள் 1/2 ஸ்பூன்

உப்பு தேவையானது

தாளிக்க:

மிளகாய் 1

கடல் பாசி 2 துண்டு

கிராம்பு 2

பிரிஞ்சி இலை 2

கடுகு 1 ஸ்பூன்

கறிவேப்பிலை சிறிது

சோம்பு 1/2 ஸ்பூன்

எண்ணெய் பொரிக்க

கடலைப்பருப்பை இரண்டு மணி நேரம் ஊறவைத்து உப்பு சேர்த்து கொரகொரப்பாக அரைக்கவும். வாணலியில் எண்ணெய் வைத்து பக்கோடா போல் கிள்ளிப்போட்டு எண்ணெயில் நன்கு சிவக்க வறுத்து எடுக்கவும். வெங்காயம், தக்காளியை பொடிப் பொடியா நறுக்கி வைக்கவும்.

வாணலியில் கடுகு, கிராம்பு, சோம்பு, கறிவேப்பிலை, பிரிஞ்சி இலை, கடல்பாசி, மிளகாய் வற்றல் கிள்ளி சேர்த்து கடுகு பொரிந்ததும் நன்கு வதக்கவும். இதில் பொடியாக நறுக்கிய வெங்காயம் போட்டு இரண்டு நிமிடம் கிளறி அதில் நறுக்கி வைத்துள்ள தக்காளி, பச்சை மிளகாய் ஆகியவற்றை சேர்க்கவும். உப்பு, மஞ்சள் தூள், காரப் பொடி சேர்த்து வதக்கவும். நான்கு கப் தண்ணீர் விட்டு கொதிக்க ஆரம்பித்ததும் பொரித்து வைத்துள்ள கடலைப்பருப்பை சேர்த்து கொதிக்கவிடவும். கனமான கரண்டி கொண்டு நன்கு மசித்துவிட ஒன்று சேர்ந்தாற் போலாகும். கடைசியாக பொடியாக நறுக்கிய கொத்தமல்லி தூவி ஒரு ஸ்பூன் சர்க்கரை சேர்த்து கொதிக்கவிட மிகவும் ருசியான வடகறி தயார்.

இதையும் படியுங்கள்:
சமையல் செய்யும்போது சில சமாளிப்பு டிப்ஸ்களையும் தெரிந்துகொள்வோமா?
Kumbakonam Special Vada Curry - Kumbakonam Kadapa

கும்பகோணம் ஸ்பெஷல் கடப்பா:

பயத்தம் பருப்பு 1 கப்

உருளைக்கிழங்கு 1

தக்காளி 2

வெங்காயம் 1

உப்பு தேவையானது

மஞ்சள் தூள் 1/2 ஸ்பூன்

அரைக்க: தேங்காய் துருவல்1/2 கப், பொட்டுக்கடலை 2 ஸ்பூன், பூண்டு 2, இஞ்சி சிறு துண்டு, கசகசா 1/2 ஸ்பூன், சோம்பு 1 ஸ்பூன், பச்சை மிளகாய் 4

தாளிக்க: கடுகு, பட்டை 1 துண்டு, சோம்பு 1/2 ஸ்பூன், கிராம்பு 2 கறிவேப்பிலை எண்ணெய்

குக்கரில் பயத்தம் பருப்பு, உருளைக்கிழங்கு இரண்டையும் சேர்த்து தேவையான உப்பு போட்டு ரெண்டு விசில் வேக விட்டு எடுக்கவும். உருளைக்கிழங்கை தனியாக எடுத்து மசித்து கொள்ளவும். வாணலியில் தாளிக்க வேண்டிய பொருட்களை சேர்த்து கடுகு பொரிந்ததும் நீளமாக நறுக்கிய வெங்காயம், தக்காளி இரண்டையும் சேர்த்து கறிவேப்பிலை போட்டு நன்கு வதக்கவும்.

வெங்காயம் நிறம் மாறி வரும்போது உப்பு, மஞ்சள்தூள் சேர்த்து வதக்கவும். அரைக்க கொடுத்துள்ள பொருட்களை நன்கு விழுதாக அரைத்து தக்காளி, வெங்காயம் நன்கு வதங்கியதும் 2 கப் தண்ணீர் விட்டு தேவையான உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து கொதிக்க ஆரம்பிக்கும் பொழுது மசித்து வைத்துள்ள உருளைக்கிழங்கு, வெந்த பயத்தம் பருப்பு ஆகியவற்றை சேர்த்து கொதிக்கவிட்டு இறக்கி பொடியாக நறுக்கிய கொத்தமல்லி தூவி பரிமாற மிகவும் ருசியான கும்பகோணம் கடப்பா தயார். செய்வதும் எளிது. ருசியும் அபாரமாக இருக்கும். செய்துதான் பாருங்களேன்!

Read Entire Article