ARTICLE AD BOX
குட் பேட் அக்லி திரைப்படத்தில் பிரபல நடிகர் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
அஜித் நடிப்பில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் உருவாகியுள்ள ’குட் பேட் அக்லி’ படத்தின் மீது பெரிய எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இந்தப் படத்தில் அஜித் மூன்று வெவ்வேறு தோற்றங்களில் நடித்துள்ளார்.
அஜித்துடன் த்ரிஷா, அர்ஜுன் தாஸ், பிரசன்னா மற்றும் யோகி பாபு உள்ளிட்ட நடிகர்களும் நடித்துள்ளனர். ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார்.
இதையும் படிக்க: புதுச்சேரி கடற்கரையில் திரையிடப்பட்ட விண்ணைத் தாண்டி வருவாயா!
படத்தின் டீசர் கடந்த மாதம் வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது. இதனைத் தொடர்ந்து, முதல் பாடல் நாளை மறுநாள் (மார். 18) அன்று வெளியாகிறது.
இந்த நிலையில், இப்படத்தில் நடிகர் சிம்பு சிறப்பு தோற்றத்தில் ஒரு காட்சியில் நடித்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. அஜித்தின் ரசிகரான சிம்பு, இப்படத்தில் இருக்க வாய்ப்பு உண்டு என்றே ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.