ARTICLE AD BOX

முரளி, வடிவேலு நடிப்பில் வெளியான சுந்தரா டிராவல்ஸ் படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமான நடிகை ராதா பல வருடங்கள் கழித்து மீண்டும் தெலுங்கு சினிமாவில் நடித்துள்ளார். கடந்த மாதம் பிப்ரவரி 14ஆம் தேதி தெலுங்கில் வெளியான தல திரைப்படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் அவர் நடித்திருந்தார் அந்தப் படம் விரைவில் தமிழ் டப்பிங் செய்து வெட்டு என்கிற பெயரில் வெளியாக உள்ள நிலையில், அந்தப் படத்திற்கான ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் பங்கேற்ற ராதா தற்போது தமிழ் சினிமாவில் தமிழ் நடிகைகளுக்கு வாய்ப்புகள் மிகவும் குறைந்து விட்டதாக கூறியுள்ளார்.

கேரளாவில் இருந்து தான் நடிகைகளை அழைத்து வருகின்றனர். இப்போதெல்லாம் தமிழ் சினிமாவில் நடிப்பது மிகவும் கடினம் ஆகிவிட்டது. தமிழ் சினிமாவில் பல நடிகைகளுக்கு நடிக்க வாய்ப்புகளே கிடைப்பதில்லை என்பதுதான் கொடுமையான விஷயமாக மாறி உள்ளது.
இயக்குனர்கள் தங்கள் படங்களுக்கு மலையாள நடிகைகளை கோலிவுட்டுக்கு கொண்டு வந்து நடிக்க செய்து வருகின்றனர். இதன் காரணமாக இங்குள்ளவர்களுக்கு வாய்ப்புகள் மறுக்கப்பட்டு வருகின்றன. ரொம்ப நாள் கழித்து, தான் நடித்த தெலுங்கு படம் தமிழில் வெளியாக காத்திருக்கிறது. இப்போது எல்லாம் படங்கள் வெளியானாலே வெற்றி தான் என்கிற நிலை உருவாகியுள்ளது.

பல படங்கள் ரிலீஸ் ஆக முடியாமல் தவித்துக் கிடக்கின்றன. கஷ்டப்பட்டு எடுக்கப்பட்ட படம் வெளியானாலே வெற்றி தான் என சினிமா உலகினர் கொண்டாடி வருகின்றனர் என்று வெளிப்படையாக பல விஷயங்களை சுந்தரா ட்ராவல்ஸ் பிரபலம் ராதா கூறியுள்ளார்.
சுந்தரா ட்ராவல்ஸ் படத்தை தாண்டி கேம், மானஸ்தன், அடாவடி மற்றும் காத்தவராயன் உள்ளிட்ட தமிழ் படங்களிலும் இவர் நடித்துள்ளார்.