ARTICLE AD BOX

பொதுவாக மக்கள் அனைவருமே வங்கிகளில் வீட்டுக்கான கடன், வாகனத்திற்கான கடன்களை வாங்குவது வழக்கம். இதில் வட்டி கட்டுவது என்பது ஒவ்வொரு மாதமும் பெரும் தலைவலியாகவே இருக்கும். இந்த நிலையில் வீட்டுக்கடன், வாகன கடன் வாங்கியவர்களுக்கு ஒரு மகிழ்ச்சியான தகவல் வெளியாகி உள்ளது. அதாவது வீட்டு, வாகன கடனுக்கான வட்டியை 3 வங்கிகள் இதுவரை குறைத்துள்ளது.
வங்கிகளுக்கான ரெப்கோ வட்டியை சமீபத்தில் ரிசர்வ் வங்கி ஆனது குறைத்தது. இதனை அடுத்து எஸ்பிஐ, பிஎன்பி(பஞ்சாப் நேஷனல் வங்கி) ஆகிய வங்கிகள் வீடு மற்றும் வாகன கடன்களுக்கான வட்டியை 0.25 சதவீதம் சமீபத்தில் குறைத்தன. இதனை அடுத்து தற்போது மகாராஷ்டிரா வங்கியும் வட்டியை 0.2% குறைத்துள்ளது. வீட்டு கடனுக்கான வட்டி 8. 10 சதவீதம், வாகன கடன் வட்டியை 8.45 சதவீதமும் குறைத்துள்ளது.