ARTICLE AD BOX
தமிழ்நாட்டில் ஆளும் திமுக அரசு - மத்தியில் ஆளும் பாஜக அரசு இடையே ஏற்பட்டுள்ள கருத்து மோதல், தமிழ்நாட்டில் அரசியல் ரீதியான மோதலை ஏற்படுத்தி இருக்கிறது. பாஜக தமிழ்நாடு மாநில தலைவர் அண்ணாமலை, திமுக நிர்வாகிகள் கருத்து மோதலில் ஈடுபட்டு வருகின்றனர்.
சென்னை கொளத்தூரில் நடைபெற்ற அரசு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு, மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கிய பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் சேகர்பாபு, அண்ணாமலையின் பேச்சுகளுக்கு கடுமையான கண்டனம் தெரிவித்தார்.
இதையும் படிங்க: பெரியார் தொடர்பாக சீமானின் பேச்சு: அமைச்சர் சேகர் பாபு நிலை என்ன?.. பளீச் பேட்டி.!
முடிந்தால் வரச்சொல்லுங்க
இதுகுறித்து தமிழ்நாடு மாநில இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, "தெம்பு, தைரியம், திராணி இருந்தால் தேனாம்பேட்டை, அண்ணா சாலையில் உள்ள அறிவாலயத்தின் ஒரு செங்கலை அண்ணாமலை தொட்டுப்பார்க்கட்டும்.
அவரை அண்ணா அறிவாலயத்தை தொட்டுப்பார்க்கச் சொல்லுங்கள். கீழ்ப்பாக்கத்தில் இருக்க வேண்டியவர்கள் பிதற்றுவதை திமுக அனுமதிக்காது" என ஆவேசத்துடன் கூறினார். இதனிடையே Get out Modi மற்றும் Get out Stalin என வாதங்கள் தொடருகிறது.
இதையும் படிங்க: ஆட்சியர் உத்தரவுக்கே மதிப்பில்லையா? ஸ்ரீவைகுண்டத்தில் வீதியில் இறங்கிய பொதுமக்கள்.. கடும் வாக்குவாதம்.!