ARTICLE AD BOX
மனித உடலுக்கு தேவையான ஆரோக்கிய நன்மைகளை கொடுப்பதில் கீரைகளுக்கு முக்கிய பங்கு உண்டு. தினமும் ஒரு கீரை சாப்பிட வேண்டும் என்பது அனைத்து மருத்துவர்களும் சொல்லும் முதல் பரிந்துரையாக உள்ளது. எந்த கீரையாக இருந்தாலும், அதில் நம் உடலக்கு ஏற்க ஆரோக்கிய நன்மைகள் அதிகம் இருக்கும். ஆனால் இந்த கீரைகளை எல்லா நேரங்களிலும் சாப்பிட முடியாது. குறிப்பாக இரவில் கீரைகளை தவிர்க்க வேண்டும் என்பது பலரின் கருத்தாக் இருக்கிறது.
இது குறித்து சத்குரு பேசிய ஒரு வீடியோவில், கீரைகளை சாப்பிட்டால், அது உடம்பில் தேவையில்லாத அம்சங்களை தங்காமல் பார்த்துக்கொள்ளும். மனித உடல் அமைப்பில் க்ளோரோஃபில்லை சமைக்காமல் ஜீரணிக்க முடியாது. அதை சமைத்து தான் சாப்பிட வேண்டும். அப்படி சமைத்தால் தான் ஓரளவிற்கு ஜீரணிக்க முடியும். அதேபோல் கீரைகளில் இருக்கும் சில அம்சங்களை மட்டும் தான் உங்களால் உடலுக்குள் உள்ளெடுத்துக்கொள்ள முடியும்.
கீரைகளில் இருக்கும் மற்ற அம்சங்கள் வீணாகத்தான் போகும். ஆனால் அவை வேறு விதமாக பயன்படுகிறது. அதில் இருக்கும் நார்ச்சத்துக்கள் நமக்கு பயன்படுகிறது. போதுமான அளவு கீரை சாப்பிட்டால், சமைக்காத கீரையாக இருந்தாலும் சரி அவை, பிரஷ் போல் வேலை செய்யும். ஜீரண மண்டலத்தில் உ்ளள கோழைகள் அனைத்தையும் அடக்கும். கீரைகள் இந்தமாதிரி வேலை செய்ய குறைந்தத 24 மணி நேரம் தேவை. அல்லது 18 முதல் 20 மணி நேரம் வரை தேவை.
இதன் காரணமாக கீரை சாப்பிட்டால் பகல் நேரத்தில் சாப்பிட்டுவிட வேண்டும். அப்போது தான், கீரைகள் மலமிளக்கியாக செயல்பட்டு, எல்லாவற்றையும் சுத்தப்படுத்தியிருக்கும். கீரைகளை இரவில் சாப்பிட்டால் அதில் பலன் கிடைக்காது என்று சத்குரு கூறியுள்ளார்.