ARTICLE AD BOX
கிளாம்பாக்கம் பேருந்து முனையத்திலிருந்து சென்னையின் பல்வேறு பகுதிகளுக்கு செல்ல கூடுதலாக 104 பேருந்துகள் , 816 பயண நடைகளில் இயக்கப்படும் என மாநகர போக்குவரத்துக் கழகம் அறிவித்துள்ளது.
ஏற்கெனவே, 80 வழித்தடங்களில் 589 பேருந்துகள் , 3 ஆயிரத்து 795 பயண நடைகளாக இயக்கப்பட்டு வரும் நிலையில் கூடுதாக பேருந்துகளை இயக்குவதன் மூலம் போக்குவரத்து நெரிசல் தவிர்க்கப்பட்டு பயணிகள் பயன்பெறுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தாம்பரம் போக்குவரத்து காவல்துறையின் பரிந்துரைப்படி , தென் மாவட்டங்களில் இருந்து செங்கல்பட்டு, திண்டிவனம் வழியாக இயக்கப்பட்டு வந்த அரசு பேருந்துகள் அனைத்தும் வரும் 4 ஆம் தேதி முதல் கிளாம்பாக்கம் கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையம் வரை இயக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.