கிருஷ்ணகிரியில் போலீசாரை தாக்கிவிட்டு தப்ப முயன்ற குற்றவாளியை சுட்டு பிடித்த போலீசார்

3 days ago
ARTICLE AD BOX

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரியில் போலீசாரை தாக்கிவிட்டு தப்ப முயன்ற குற்றவாளியை போலீசார் சுட்டு பிடித்தனர். தனது உறவினருடன் கிருஷ்ணகிரி மலைக்கு சென்ற பெண்ணை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்து 4 போதை இளைஞர்கள் வழிப்பறியில் ஈடுபட்டனர். ஏற்கனவே 2 பேர் கைது செய்யப்பட்ட நிலையில் தலைமறைவாக இருந்த மேலும் இருவரை போலீசார் பிடிக்க சென்ற போது துப்பாக்கி சூட நடத்தப்பட்டது. பொன்மலைகுட்டை பெருமாள் கோவில் பின்புறம் இரண்டு பேர் பதுங்கி இருப்பதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் போலீசார் சுற்றி வளைத்து கைது செய்ய முயன்றனர்.

அப்போது குற்றவாளிகள் கத்தியால் தாக்கியதில் இரண்டு காவலர்கள் காயமடைந்தனர். இதனால் தற்காப்புக்காக போலீசார் துப்பாக்கியால் சுட்டதில் சுரேஷ் என்ற குற்றவாளி காலில் காயம் ஏற்பட்டது. மேலும் தப்பி செல்ல முயன்ற மற்றொரு குற்றவாளி நாராயணன் கால் முறிவு ஏற்பட்டு உள்ளது. மாவட்ட காவல் கண்கானிப்பாளர் தங்கதுரை சம்பவ இடத்தில் ஆய்வு மேற்கொண்டு வருகிறார்.

The post கிருஷ்ணகிரியில் போலீசாரை தாக்கிவிட்டு தப்ப முயன்ற குற்றவாளியை சுட்டு பிடித்த போலீசார் appeared first on Dinakaran.

Read Entire Article