கிணற்றில் மூழ்கி சிறுத்தை பலி!

3 hours ago
ARTICLE AD BOX

ஹிமாசல பிரதேசத்தில் கிணற்றில் மூழ்கி பலியான நிலையில் சிறுத்தையின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

ஹமிர்பூர் மாவட்டத்தின் பாரேரி கிராமத்தின் கிணற்றில் நேற்று (பிப்.24) இறந்த நிலையில் சிறுத்தையின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டது. பின்னர், இதுகுறித்து தகவலறிந்த காவல் துறையினர் சிறுத்தையின் சடலத்தை மீட்டு உடல் கூராய்வு சோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

இதையும் படிக்க: ரூ.60,000-க்கு குழந்தையை விற்க முயன்ற 4 பேர் கைது!

இதனைத் தொடர்ந்து, அந்த சோதனையில் சிறுத்தை கிணற்று நீரில் மூழ்கியதினால்தான் பலியாகியுள்ளது என்பது உறுதி செய்யப்பட்டது. அதன் பிறகு போலீஸார் அந்த சிறுத்தையின் சடலத்தை வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர்.

முன்னதாக, போரஞ்ச் பகுதியில் வனவிலங்குகளின் நடமாட்டம் அதிகளவில் உள்ளதால் அப்பகுதி மக்கள் கூண்டமைத்து விலங்குகளை பிடிக்குமாறு வனத்துறையினரை தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.

Read Entire Article