ARTICLE AD BOX

பிரயாக்ராஜில் நடைபெறும் மகா கும்பமேளாவிற்கு தினமும் லட்சக்கணக்கான பக்தர்கள் வந்து செய்கின்றனர். இந்த நிலையில் மகா கும்பமேளா விழாவிற்கு வரும் பக்தர்களால் தங்களது அன்றாட வாழ்க்கை பாதிக்கப்படுவதால் பக்தர்கள் வர வேண்டாம் என பிரயாக்ராஜ் மக்கள் வேண்டுகோள் வைத்துள்ளனர்.
அவர்கள் கூறியதாவது, கடவுளை நேசிப்பவர்கள் தயவு செய்து இங்கு வர வேண்டாம். கங்கையும் சங்கமும் எங்கும் சென்று விடாது. சில நாட்களுக்கு பிறகு வந்தால் நிம்மதியாகவும் அமைதியாகவும் நீராடலாம். தற்போது இங்குள்ள சாலைகள் போக்குவரத்து நெரிசலால் திணறுகிறது. மக்களின் அன்றாட வாழ்க்கையும் பாதிக்கப்பட்டுள்ளது என கூறியுள்ளனர்.