ARTICLE AD BOX

இயற்கை, உள்ளம் கேட்குமே போன்ற படங்களின் மூலமாக அனைவருக்கும் பிடித்த ஹீரோவாக மாறியவர்தான் ஷாம். வாரிசு படத்தில் விஜய்க்கு அண்ணனாக நடித்திருந்தார். பிறகு தெலுங்கில் ரவிதேஜ, அல்லு அர்ஜுன் போன்ற ஹீரோக்களின் படங்களிலும் நடித்து பிரபலமானார். ஒரு சில படத்தில் வில்லனாகவும் நடித்துள்ளார். தமிழை போல தெலுங்கிலும் அவருக்கு நல்ல மார்க்கெட் இருந்தது, தற்போது அஸ்திரம் படத்தில் ஷாம் நடித்து வருகிறார். இந்த படத்திற்கான ப்ரோமோஷன் பணிகளில் அவர் இருந்தபோது அளித்த பேட்டியில் வாழ்வில் மறக்க முடியாத ஒரு வலியை கூறினார்.
அதாவது, “சினிமாவில் நுழைந்ததும் கிசுகிசு வந்ததும் என்னுடைய அம்மாவை ரொம்பவே பாதித்தது. ஆனால் நான் அதைப்பற்றி கண்டு கொள்ள வேண்டாம் என்று அம்மாவிடம் சொன்னேன். ஆனால் அதைவிட பெரிய வலி என்னவென்றால் ஒரு இயக்குனரை நம்பி நான் ஃபர்ஸ்ட் காபி என்ற அடிப்படையில் தயாரிப்பாளரிடம் இருந்து மூன்றரை கோடி வாங்கி கொடுத்தேன். ஆனால் என்னை சுற்றி இருந்தவர்கள் எச்சரித்தனர். நான் கேட்கவில்லை. ஆனால் அவர் 1.5 கோடி வைத்துக்கொண்டு என்னை ஏமாற்றி விட்டார்” என்று நினைவுபடுத்திள்ளார்.