ARTICLE AD BOX
அண்ணா சீரியல் மார்ச் 19 எபிசோட்: தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 8:30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் அண்ணா. இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் சண்முகம் சௌந்தரபாண்டியை காவடி தூக்க வைத்த நிலையில் இன்று நடக்கப்போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.
ஆசிட் கலந்த நீர்
அதாவது, சௌந்தரபாண்டி காவடி எடுத்ததும் காலுக்கு மஞ்சள் தண்ணீரை ஊற்ற போக சௌந்தரபாண்டி அதான் காவடி தூக்கிட்டேனே இனிமே அதெல்லாம் எதுக்கு என பதைபதைக்க வழக்கத்தை மாற்ற முடியாது என சண்முகம் சொல்கிறான்.
இசக்கி தண்ணீரை ஊற்ற சௌந்தரபாண்டி காலில் தண்ணீர் படாமல் எகிறி குதித்து விட ஆசிட் கலந்த தண்ணீர் பாண்டியம்மா காலில் விழ ஐயோ எரியுதே என கத்துகிறார். எல்லாரும் மஞ்ச தண்ணீர் எப்படி எரியும் என்று கேட்க பாண்டியம்மா அதெல்லாம் சொன்னா புரியுது என்று சொல்கிறாள்.
எமோஷனலான இசக்கி
பிறகு சண்முகமும் காவடி எடுத்து கொண்டு நல்லபடியாக கோவிலுக்கு வந்து வேண்டுதலை முடிக்க இசக்கி எமோஷனலாகிறாள். சண்முகம் இது என்னுடைய கடமை என அவளுக்கு ஆறுதல் சொல்கிறான்.
அடுத்ததாக அலகு குத்தியதால் பேச முடியாமல் இருக்கும் சௌந்தரபாண்டி அந்த சண்முகத்தை சும்மா விட கூடாது என ஆவேசப்பட ஆரம்பத்தில் இருந்து இதை தான் சொல்லிட்டு இருக்கீங்க என்று கலாய்க்கிறான்.
சௌந்தர பாண்டியின் திட்டம்
தொடர்ந்து பரணி விசா இன்டெர்வியூ அட்டென்ட் செய்ய சென்னைக்கு வர சொல்லி லெட்டர் வந்திருக்க சௌந்தரபாண்டி இதை வைத்து பரணியை சென்னைக்கு அனுப்பி அப்படியே அமெரிக்கா அனுப்பி வைக்க திட்டம் போடுகிறார்.
பரணியை வீட்டிற்கு வர வைத்து அந்த சண்முகம் பையன் தங்கச்சிங்க மேல தான் பாசமா இருக்கான்? நீ அமெரிக்கா போக போறியா? உன் முடிவை மாத்திக்க போறியா? என்று கேட்க பரணி என் முடிவில் நான் உறுதியாக இருக்கேன் என்று சொல்கிறாள்.
இப்படியான நிலையில் அடுத்து நடக்கப்போவது என்ன என்பது குறித்து அறிய அண்ணா சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.
பொறுப்புத் துறப்பு:
இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல், பொருள் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்களில் இருந்து சேகரித்து, உங்களுக்குத் தரப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

டாபிக்ஸ்