ARTICLE AD BOX
காஸா மீது இஸ்ரேல் ராணுவம் மீண்டும் தாக்குதல் நடத்தியதில் 413 பாலஸ்தீனர்கள் பரிதாபமாக பலியாகினர்.
போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி தெற்கு மற்றும் மத்திய காஸா பகுதியில் உள்ள அல் மவாஸி, அல் தராஜ், ராஃபா, கான் யூனிஸ், உள்ளிட்ட பகுதிகளில் இஸ்ரேல் படையினர் வான்வழித் தாக்குதலில் ஈடுபட்டுள்ளனர்.
ரமலான் மாதத்தில் நடத்தப்பட்ட இந்தத் தாக்குதலில் குழந்தைகள், பெண்கள் உள்பட 400-க்கும் மேற்பட்டோர் பரிதாபமாக பலியாகினர். மேலும், இந்த கொடூரத் தாக்குதலில் 150-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
போர் நிறுத்த ஒப்பந்தத்தை மாற்றுவதற்கான இஸ்ரேலின் கோரிக்கைகளை ஹமாஸ் நிராகரித்ததை தொடர்ந்து, பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு இந்தத் தாக்குதல்களுக்கு உத்தரவிட்டார்.
இதையும் படிக்க: விராட் கோலி ஸ்டிரைக் ரேட்டை அதிகப்படுத்த தேவையில்லை: ஏபி டி வில்லியர்ஸ்
இதுதொடர்பாக இஸ்ரேலிய ராணுவம் வெளியிட்ட எக்ஸ் பதிவில், “ஹமாஸ் ஒத்துழைப்பு தராததால் அவர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. மேலும், காஸாவில் உள்ள பள்ளிகளை மூடவும் உத்தரவிட்டப்பட்டுள்ளதாகத்” தெரிவித்துள்ளது.
ஹமாஸின் உயர்நிலை பாதுகாப்பு அதிகாரியான காஸாவின் உள்துறை துணை அமைச்சரான மொகமத் அபு வஃபா இந்த தாக்குதலில் கொல்லப்பட்டதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது.
ஜனவரி 19-ஆம் தேதி காஸாவில் போர் நிறுத்தம் அமலுக்கு வந்த பின்னர் நடைபெறும் மிகப்பெரிய வான்வழித் தாக்குதல் இதுவாகும். காஸா போர் நிறுத்தத்தை நீட்டிப்பதற்கான பேச்சுவார்த்தைகள் தோல்வியடைந்ததையடுத்து மீண்டும் போர் துவங்கியிருக்கிறது.
இதுவரை இஸ்ரேலின் பதிலடித் தாக்குதல்களில் இதுவரை 48,000-க்கும் அதிகமான பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்டுள்ளதாகவும், 1.12 லட்சத்திற்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதையும் படிக்க: பிரிட்டன் போரின் கடைசி விமானி 105 வயதில் மரணம்!