காளான் சாப்பிட்டால் உடல் எடை குறையும்...எப்படின்னு தெரியுமா?

3 days ago
ARTICLE AD BOX

உடல் எடையை குறைக்க, அதிகரிக்கும் உடல் எடையை கட்டுக்குள் வைக்க பலரும் உடல்பயிற்சி, டையட் என பலவற்றையும் பின்பற்றுகிறார்கள். இதில் அதிகமானவர்கள் தேர்வு செய்யும் முறை உணடு கட்டுப்பாடு தான். ஆனால், உணவின் தரம் முக்கியமானது. அப்படி ஆரோக்கியமான முறையில் உடல் எடையை குறைக்க நினைப்பவர்கள் தங்களின் உணவில் காளான்களை அதிகம் சேர்த்துக் கொள்வதால் நல்ல பலவை காண முடியும். காளான்கள் (Mushrooms) குறைந்த கலோரி மற்றும் அதிக சத்துக்களை கொண்ட ஒரு இயற்கை உணவாக இருப்பதால், எடை குறைக்க விரும்புபவர்களுக்கு சிறந்த உணவாக கருதப்படுகிறது.

1. காளானில் உள்ள சத்துக்கள் : 

குறைந்த கலோரி, அதிக நார்ச்சத்து  உள்ளதால் அதிக நேரம் நிறைவுடன் இருக்க உதவும். ஒரு கப் (100 கிராம்) காளானில் வெறும் 22-25 கலோரி மட்டுமே உள்ளன. அதே சமயம், இதில் நார்ச்சத்து அதிகம் இருப்பதால், நீண்ட நேரம் பசிக்காமல் இருக்க உதவுகின்றன. அதிக நேரம் நிறைவாக இருப்பதால், இடையே சாப்பிடும் பழக்கம் குறையும். பசியை குறைக்கும் ஹார்மோன்களின் செயல்பாட்டை தூண்டும்.

2. புரதம் (Protein) அதிகம் - தசைகளை வலுவாக்கும்:

புரதம் நிறைந்த உணவுகள் உடல் எடையைக் குறைப்பதில் முக்கிய பங்கு வகிக்கின்றன. காளான்கள், குறிப்பாக Portobello, Shiitake, Oyster போன்ற வகைகள், அதிக அளவு புரதத்தை வழங்குகின்றன. இதனால் உடலில் தேவையான ஆற்றலை வழங்கி, தசைகள் வலுவாக வளரச் செய்யும்.
கொழுப்பை எரிக்க உதவும்.  ஏனெனில் அதிக புரத உணவுகள் உடலுக்குச் செலவாகும் கலோரியை அதிகரிக்கின்றன.

3. மெதுவாக ஜீரணிக்கப்படும் கார்போஹைட்ரேட்டுகள் - இரத்த சர்க்கரை கட்டுப்பாடு :

உடல் எடையை குறைக்க விரும்புவோர், களைப்பை ஏற்படுத்தும் சர்க்கரை மற்றும் அதிக கார்போஹைட்ரேட்டுகள் கொண்ட உணவுகளை தவிர்க்க வேண்டும். அதற்கு காளான்கள் மிகவும் உதவிகரமாக உள்ளன.

காளான்களின் சிறப்பம்சம்:

இவை குறைந்த கார்போஹைட்ரேட்டுகள் கொண்ட உணவாகும். மெதுவாக ஜீரணிக்கப்படும் தன்மையால், இரத்த சர்க்கரை வேகமாக உயர்வதைத் தடுக்கும். இன்சுலின் செரிமானத்தை மேம்படுத்தி, உடல் கொழுப்பு சேராமல் தடுக்கும். 100 கிராம் காளானில் 2-3 கிராம் மட்டுமே கார்போஹைட்ரேட் இருக்கும். இதன் Low Glycemic Index காரணமாக, சர்க்கரை நோயாளிகளுக்கும் இது சிறந்த உணவாகும்.

4. கொழுப்பை குறைக்கும் பீட்டா-குளுக்கான் :

காளான்களில் உள்ள முக்கியமான நார்ச்சத்து வகையான பீட்டா-குளுக்கான் (Beta-Glucan) உடல் கொழுப்பை குறைக்கும் தன்மை கொண்டது. உடலில் மெட்டபாலிசத்தை அதிகரிக்க உதவுகிறது. கொழுப்பு செல்கள் சேமிக்கப்படுவதை தடுக்கிறது. வயிற்று பகுதி (Belly Fat) குறையும்.

5. மெட்டபாலிசத்தை அதிகரிக்கும் செலினியம், பி வைட்டமின்கள் :

மெட்டபாலிசம் என்பது உணவுகளில் இருந்து பெறப்பட்டு உடலில் தேங்கும் கலோரியை எரிக்க உதவும் செயல்முறை. காளான்கள் இந்த செயல்முறையை அதிகரிக்கக்கூடிய பி வைட்டமின்கள் (B2, B3, B5) மற்றும் செலினியம் (Selenium) போன்ற தாது உப்புகளை கொண்டுள்ளன.செல்கள் எரிச்சலை (Oxidative Stress) குறைத்து, கொழுப்பை எரிக்க உதவும். மெட்டபாலிசம் வேகமாக இயங்குவதால், அதிக கலோரிகள் எரிந்து, எடை குறையும்.
உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.

6. மனஅழுத்தத்தைக் குறைத்து, எடையை கட்டுப்படுத்தும் : 

மன அழுத்தம் அதிகமாக இருந்தால், பலரும் உணவின் மீது அதிக ஈர்ப்பு கொள்வார்கள். இதனால் Emotional Eating ஏற்பட்டு, உடல் எடை அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. இதில் Adaptogens (மன அழுத்தம் குறைக்கும் சேர்மங்கள்) உள்ளன. தூக்கத்தை மேம்படுத்தும் Melatonin ஹார்மோனை ஊக்குவிக்கும். மனநிலையை சீராக்கும் Serotonin மற்றும் Dopamine ஆகிய ஹார்மோன்களை இயக்கி, உணவுப் பழக்கங்களை கட்டுப்படுத்தும்.

7. காளான்கள் எப்படி உணவில் சேர்ப்பது?

சூப், சாலட், கிரேவி, பிரியாணி, ஆம்லேட், ஸ்நாக்ஸ் என பல வகைகளில் விருப்பம் போல் சமைத்து காளான்களை சாப்பிடலாம். காலை, மதியம், இரவு மட்டுமின்றி இடையிடையே ஸ்நாக்சாக சாப்பிட்டு மகிழவும் காளான்கள் மிகவும் ஏற்றதாகும். இதை வறுத்தும் கூட சாப்பிடலாம்.

Read Entire Article