ARTICLE AD BOX
மஞ்சள் வாழைப்பழம் பற்றியும், அதனால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் பற்றியும் அனைவருக்கும் தெரியும். ஆனால் செவ்வாழை சாப்பிட்டால் என்ன ஆகும் என்று தெரியுமா? இது சாதாரண வாழைப்பழத்தை விட மிகவும் ஊட்டச்சத்து நிறைந்ததாகவும், பல்வேறு ஆரோக்கிய நன்மைகள் கொண்டதாகவும் இருக்கிறது. தினமும் காலை வெறும் வயிற்றில் ஒரு செவ்வாழைப்பழம் சாப்பிடுவது, ஆரோக்கியமான நாளை தொடங்க சிறந்த வழியாக இருக்கும். இதில் நார்ச்சத்து ,வைட்டமின்கள் மற்றும் ஆன்டிஆக்சிடன்ட்கள் நிறைந்துள்ளதால், செரிமானத்தை அதிகப்படுத்தி, நீண்ட நேரம் பசிக்காமல் வைத்திருக்கிறது.
மேலும், இயற்கையான சர்க்கரை அதிகம் இருப்பதால் உடல் சக்தியை உடனடியாக அதிகரிக்க உதவுகிறது. ஆனால் சர்க்கரை அளவு திடீரென குறைவதற்கு நிச்சயம் இது காரணமாகாது. இதில் பொட்டாசியம் அளவு அதிகமாக இருப்பதால் இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்த உதவுகிறது. மேலும் வைட்டமின் சி நோய் எதிர்ப்பு மண்டலத்தை பலப்படுத்துகிறது.
செவ்வாழை பழத்தில் இருக்கும் ஊட்டச்சத்துக்கள் :
செவ்வாழைப்பழத்தில் பொட்டாசியம், மக்னீஷியம், இரும்புச்சத்து, ட்ரிப்டோபான், வைட்டமின் பி6, கால்சியம், நார்ச்சத்து போன்ற சத்துக்கள் அதிகமாக உள்ளது. 25 சதவீதம் சர்க்கரையும், 89 கலோரிகளும் உள்ளன. வாழைப்பழம் சாப்பிடுவதால் சோர்வு, மலச்சிக்கல், மன அழுத்தம், நெஞ்செரிச்சல், வயிற்றுப்புண் ஆகியவை நீங்குகிறது. இதில் இரும்புச்சத்து அதிகம் உள்ளதால் உடலில் ஹீமோகுளோபின் அளவு அதிகரித்து, இரத்த சோகையை போக்குகிறது. இதில் சர்க்கரை உள்ளதால் உடலுக்கு உடனடியாக ஆற்றலை தருகிறது.
செவ்வாழைப்பழம் - ஏன் தினமும் வெறும் வயிற்றில் சாப்பிட வேண்டும்?
1. செரிமானம் அதிகரிக்கும் - செவ்வாழைப்பழத்தில் நார்ச்சத்து அதிகமாக இருப்பதால், இது வயிற்றுப் போக்கை தடுக்கும் மற்றும் சீரான மலம் வெளியேற்றதலை ஏற்படுத்துகிறது. இது ஆரோக்கியமான குடல் செயல்பாட்டிற்கு உதவுகிறது.
2. இதய ஆரோக்கியம் - மஞ்சள் வாழைப்பழத்தை விட, செவ்வாழைப்பழம் உயர்ந்த அளவு பொட்டாசியம் மற்றும் மாங்கனீயம் கொண்டுள்ளது. இது இரத்த அழுத்தத்தை இயற்கையாக குறைத்து, இதய நோய்களை தடுக்கும்.
3. உடல் சக்தி அதிகரிக்கும் - காலையில் வெறும் வயிற்றில் செவ்வாழைப்பழம் சாப்பிடுவதால், உடலுக்கு உடனடி சக்தி கிடைக்கும். இது நீண்ட நேரம் பசிக்காமல் வைத்திருக்க, உங்கள் நாளைச் செயல்திறன் மிகுந்ததாக மாற்ற உதவும்.
4. உடல் எடை கட்டுப்பாடு - செவ்வாழைப்பழம் இரத்தத்தில் சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்தி, திடீர் பசி ஏற்படாமல் தடுக்கும். இதன் மூலம் மிதமான உணவுப் பழக்கத்தை உருவாக்கி, உடல் எடை கட்டுப்பாட்டில் இருக்கும்.
செவ்வாழைப்பழத்தை உங்கள் தினசரி உணவுப் பட்டியலில் சேருங்கள். இது நீரிழிவை கட்டுப்படுத்த, உடலுக்கு சக்தி அளிக்க மற்றும் இதயத்தை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகிறது. தினமும் வெறும் வயிற்றில் ஒரு செவ்வாழைப்பழம் சாப்பிட்டு நாளை துவங்கினால், அது ஆரோக்கியமான, புத்துணர்ச்சியான நாளாக இருக்கும். அதே சமயம் மஞ்சள் வாழைப்பழத்தில் அமிலத்தன்மை அதிகம் என்பதால் அவற்றை காலையில் வெறும் வயிற்றில் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும் என டாக்டர்கள் பரிந்துரைக்கிறார்கள்.