ARTICLE AD BOX
Unhealthy Morning Habits : உங்களது ஆரோக்கியத்தை பாதிக்கக்கூடிய 5 ஆரோக்கியமற்ற காலை பழக்கவழக்கங்களை பற்றி இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

காலையில் நம்மிடம் இருக்கும் சில பழக்க வழக்கங்கள் தான் நம்முடைய நாளில் தொடக்கத்தை தீர்மானிக்கின்றன. மேலும் காலை எழுந்தவுடன் நம்முடைய ஆரோக்கியத்தை பாதிக்கும் சில விஷயங்களை நாம் செய்யக்கூடாது என்பதில் கவனமாக இருக்க வேண்டும். முக்கியமாக காலையில் நல்ல பழக்க வழக்கங்களை கடைப்பிடிப்படிப்பது நாளின் தொடக்கத்தில் எந்த எதிர் மாதிரியான ஏற்படுத்தாது. எனவே, இந்த பதிவில் நம்முடைய ஆரோக்கியத்தை பாதிக்கும் ஆரோக்கியமற்ற 5 காலை பழக்கவழக்கங்கள் உள்ளன. அவை என்ன? அவற்றை ஏன் தவிர்க்க வேண்டும் என்பதை பற்றி தெரிந்து கொள்ளலாம்.

காலையில் தாமதமாக தூங்கி எழுவது உங்களது நாள் முழுவதையும் பாதிக்கும். இதனால் உங்களால் சரியாக அன்றைய பணிகளை செய்ய முடியாமல் போகும். இதனால் நீங்கள் மன அழுத்தத்திற்கு ஆளாவீர்கள். மேலும் உங்களது முழு நாளும் வீணாகப்போகும். எனவே, தாமதமாக எழுந்திருக்காமல், அதிகாலையில் எழுந்து, உங்களது நாளை நல்ல முறையில் தொடங்க முயற்சி செய்யுங்கள்.

காலையில் எழுந்தவுடன் மொபைல் போனை பார்க்கும் பழக்கம் பெரும்பாலானவருக்கு உண்டு. ஆனால் அது தவறு. நீங்கள் காலை எழுந்தவுடன் உங்களது மொபைல் போனை பயன்படுத்தினால் உங்கள் கண்கள் மற்றும் மூளையும் பாதிக்கப்படும். இதனால் தலைவலி, கண்வலி மற்றும் சோர்வு ஏற்படும். மேலும் மொபைல் போனை அதிகமாக பயன்படுத்தினால் தூக்கமின்மை பிரச்சனையை ஏற்படுத்தும். எனவே காலையில் மொபைல் போனை பயன்படுத்துவதை தவிர்த்து உங்களது நாளை நன்றாக தொடங்க ஆரம்பிங்கள்.
இதையும் படிங்க: இந்த பழக்கங்களை பின்பற்றினால் சர்க்கரை நோய், கேன்சர் போன்ற நோய்கள் வராது!

சிலர் காலை உணவை தவிர்ப்பதை வழக்கமாக கொண்டுள்ளனர். ஆனால் காலை உணவை சாப்பிடாமல் இருந்தால் உங்கள் உடலுக்கு தேவையான ஊட்டச்சத்துக்கள் கிடைக்காமல் போகும். இதனால் உடலில் ஆற்றல் பற்றாக்குறை மற்றும் சோர்வு ஏற்படும். இது தவிர நீரிழிவு மற்றும் இதய நோய் போன்ற பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும். எனவே காலை உணவை ஒருபோதும் தவிர்க்க வேண்டாம்.
இதையும் படிங்க: 45 வயதுக்கு மேல் இந்த '8' விஷயங்களை கண்டிப்பா கவனிங்க!! ஆரோக்கியமா இருக்கலாம்

நாம் ஒவ்வொருவரும் தினமும் காலை உடற்பயிற்சி செய்வதை வழக்கமாக்கிக் கொள்ள வேண்டும். இதனால் உடல் பருமன், நீரிழிவு மற்றும் இதய நோய் போன்ற பிரச்சனைகளில் இருந்து விடுபடலாம். உடற்பயிற்சி செய்யாமல் இருந்தால் மன அழுத்தம், சோர்வு ஏற்படும். ஆனால் பெரும்பாலும் மக்கள் இதைப் புறக்கணிக்கிறார்கள். எனவே, தினமும் காலையில் உடற்பயிற்சி செய்து உங்களது உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளுங்கள்.

உங்களது நாளை பயனுள்ளதாக இருக்க மற்றும் உங்களுடைய இலக்குகளை அடைய ஒவ்வொரு நாளும் திட்டத்தை நீங்கள் வைத்திருக்க வேண்டும். அன்றே நாளுக்குரிய திட்டத்தை நீங்கள் வைப்பதன் மூலம் உங்களது மனநிலை புத்துணர்ச்சியுடன் இருக்கும். மேலும் நாள் முழுவதும் நீங்கள் மகிழ்ச்சியாக உணரலாம்.