ARTICLE AD BOX
Karadaiyan Nonbu 2025 : காரடையான் நோன்பு என்பது மாசி மாதத்தில் சுமங்கலி பெண்களால் கடைப்பிடிக்கப்படும் விரதங்களில் ஒன்றாகும். இந்த நோன்பு மாசி மாதத்தில் வரும் மிக முக்கியமான விரதங்களில் ஒன்றாகும். காரடையான் நோன்பு விரதம் இருப்பவர்களுக்கு அம்பாளின் பூரண அருள் கிடைக்கும் என்பது ஐதீகம். சரி, இப்போது இந்த காரடையான் நோன்பு விரதம் எப்படி, எந்த நேரத்தில் கடைப்பிடிக்க வேண்டும் மற்றும் அதனால் கிடைக்கும் பலன்கள் குறித்து இங்கு காணலாம்.
காரடையான் நோன்பு 2025 என்றால் என்ன?
காரடையான் நோன்பு என்பது தீர்க்க சுமங்கலி வரம் கிடைக்க வேண்டும் என்பதற்காக திருமணமான பெண்களால் கடைபிடிக்கப்படும் ஒரு முக்கியமான விரதமாகும். இந்த விரதமானது கௌரி விரதம், காமாட்சி விரதம், சாவித்திரி விரதம் உள்ளிட்ட பல பெயர்களால் அழைக்கப்படுகின்றது. இந்த விரதத்தை திருமணமாகாத பெண்களும் தங்களுக்கு நல்ல கணவன் கிடைக்க வேண்டும் என்று வேண்டி விரதம் இருக்கலாம். இந்த விரதம் எளிமையானது என்றாலும், ரொம்பவே சக்தி வாய்ந்தது.
இதையும் படிங்க: மாசி பெளர்ணமி 2025 : பணம் குவிய!! பகவானை வணங்க வேண்டிய அற்புதமான நாள்!
காரடையான் நோன்பு இருக்கும் முறை:
காரடையான் நோன்பு இருப்பவர்கள் அதிகாலையில் எழுந்து நீராடி விட்டு கார் ஆடை, இனிப்பு ஆடை ஆகியவற்றை வைத்து வழிபாடுங்கள். வாழை இலையில் நைவேத்தியம் படைப்பவர்கள் நான்கு வாழை இலைகளை போட்டு தான் வழிபட வேண்டும். தட்டில் வைத்து படைத்தால் அதில் கார மற்றும் இனிப்பு அடை, வாழைப்பழம், வெற்றிலை, பாக்கு, உருகாத வெண்ணெய் ஆகியவற்றை வைத்து வழிபடுங்கள். இந்த விரத நாளில் அம்பிகையை மனதார வேண்டி விரதமிருந்து வழிபட்டால் தீர்க்க சுமங்கலி வரம் கிடைக்கும் என்பது நம்பிக்கை.
இதையும் படிங்க: பங்குனி உத்திரம் 2025 : இந்த விளக்கை ஏற்றினால் நீங்க நினைச்சது அப்படியே நடக்கும்
தாலி சரடு மாற்றும் முறை:
தாலி சரடு மாற்றும் பெண்கள் மஞ்சள் கிழங்கில் தாலி கயிற்றைக் கட்டி, அதை அம்பிகையின் பாதத்தில் வைத்து வழிபட்டு பிறகு கணவனின் கையால் அல்லது மூத்த சுகங்களில் பெண்ணின் கையால் அல்லது நீங்களாகவே உங்களது கழுத்தில் கட்டி கொள்ளுங்கள். ஒருவேளை நீங்கள் சமீபத்தில் தான் தாலி சரடு மாற்றி இருக்கிறீர்கள் என்றால், மஞ்சள் நூலில் 2 பூக்களை மட்டும் வைத்து கட்டவும். பின் அதை அம்மனின் பாதத்தில் வைத்து அடிப்படை வேண்டும். அதன் பிறகு அதை உங்களது கழுத்தில் அல்லது கையில் கட்டில் கொள்ளுங்கள்.
காரடையான் நோன்பு 2025 தேதி மற்றும் நேரம்:
இந்த 2025 ஆம் ஆண்டு காரடையான் நோன்பு மார்ச் 14ஆம் தேதி வெள்ளிக்கிழமை அதாவது இன்று. இந்நாளில் விரதம் இருப்பவர்கள் அதிகாலையில் எழுந்து பூஜை செய்து வழிபட்டு தாலி சரடு கட்டிக்கொண்டு விரதம் இருக்க வேண்டும்.
பூஜைக்கான நேரம் : காலை 6 மணி முதல் 7:50 மணி வரை அல்லது காலை 9:30 மணி முதல் 10:20 மணி வரை.
தாலி சரடு கட்டுவதற்கான நேரம் : காலை 7:00 மணி முதல் 7:20 மணி வரை அல்லது கலை 9:30 மணி முதல் 10:15 மணி வரை.