காதை கிழிக்கும் அளவுக்கு குறட்டை சத்தம்... இந்த இலை சாறுடன் தேன்: டாக்டர் கௌதமன் டிப்ஸ்

4 hours ago
ARTICLE AD BOX

உடலில் ஏற்படும் பெரும்பாலான பிரச்சனைக்கு தூக்கமின்மை காரணமாக இருக்கும் என்று வல்லுநர்கள் கூறுகின்றனர். சிலருக்கு முற்றிலும் அமைதியான சூழ்நிலையில் இருந்தால் தான் சரியாக தூக்கம் வரும்.

Advertisment

ஆனால், குறட்டை பிரச்சனை உள்ளவர்கள் அருகில் இருப்பவர்களுக்கு இது சாத்தியம் இல்லை. அந்த வகையில், குறட்டைக்கு வீட்டு வைத்திய முறையில் எளிமையாக தீர்வு எப்படி காணலாம் என்று மருத்துவர் கௌதமன் தெரிவித்துள்ளார்.

ஒரு வீட்டின் படுக்கையறையில், ஒருவருக்கு மேற்பட்ட நபர்களை தூங்க விடாமல் துரத்தி அடிப்பதில் குறட்டை நோய் முக்கிய பங்கு வகிப்பதாக மருத்துவர் கௌதமன் தெரிவித்துள்ளார். குறட்டை பிரச்சனைக்காக விவாகரத்து கோரி எத்தனையோ தம்பதிகள் நீதிமன்றத்தை நாடியுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

எனினும், குறட்டை என்பது குணப்படுத்த முடியாத நோய் இல்லை என மருத்துவர் கௌதமன் கூறுகிறார். 100 நாட்கள் காலையில் வெறும் வயிற்றில் 30 மில்லி லிட்டர் வல்லாரை சாறுடன், ஒரு ஸ்பூன் தேன் கலந்து  குடிக்க வேண்டும் என மருத்துவர் கௌதமன் அறிவுறுத்துகிறார்.

Advertisment
Advertisements

ஒருவேளை கணவருக்கு இந்த பிரச்சனை இருந்தால், மருந்தை மனைவி தயாரித்து கொடுக்க வேண்டும் எனவும், மனைவிக்கு இந்த பிரச்சனை இருந்தால், மருந்தை கணவன் தயாரித்துக் கொடுக்க வேண்டும் என்றும் மருத்துவர் கௌதமன் பரிந்துரைக்கிறார். 

இந்த மருந்தை 100 நாட்களுக்கு தொடர்ந்து கொடுத்து வந்தால், குறட்டை பிரச்சனை முற்றிலும் குணமாகி விடும் என மருத்துவர் கௌதமன் உறுதியாக தெரிவித்துள்ளார்.

நன்றி - Nalam 360 Youtube Channel

 

பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில்/ நாங்கள் தொடர்பு கொண்டு பேசிய நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை நீங்கள் கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது உங்கள் உடல்நலப் பயிற்சியாளரை அணுகும்படி கேட்டுக் கொள்கிறோம்.

Read Entire Article