ARTICLE AD BOX
சென்னையில் உள்ள கோட்டூர்புரம், சித்ரா நகரில் வசித்து வருபவர் அருண். இவரின் நண்பர் சுரேஷ் என்ற படைப்பை சுரேஷ். இவர்கள் இருவரும் நேற்று, அங்குள்ள நாகவள்ளியம்மன் கோவில் அருகில் போதையில் படுத்து உறங்கினார்.
2 ரௌடிகளுக்கு நேர்ந்த பயங்கரம்
அப்போது, இவர்களை சுற்றி வளைத்த கும்பல், சரமாரியாக அரிவாள் உட்பட பயங்கர ஆயுதத்தால் வெட்டி சாய்ந்தது. இந்த சம்பவத்தில் படைப்பை சுரேஷ் நிகழ்விடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
இதையும் படிங்க: பூஜை செஞ்சா குடும்ப பிரச்சனையெல்லாம் சரியாயிடும்.. இளைஞரிடம் நகை ஏமாற்றிய பெண் கைது.!
மேலும், அருண் பொதுமக்கள் மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்ட நிலையில், அங்கு அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இந்த விஷயம் குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர், நிகழ்விடத்திற்கு விரைந்து இருவரின் உடலையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
ஸ்கெட்ச் போட்டவர் கொலை
மேலும், விசாரணையில் 2022 ம் ஆண்டில் அருணின் காதலியை ரௌடி ஒருவர் படுகொலை செய்துள்ளார். இதனால் காதலியின் கொலைக்கு பழிவாங்க அருண் தனது மற்றொரு நண்பரான ரௌடி அர்ஜூனுடன் திட்டம் தீட்டி இருக்கிறார்.
இந்த தகவலை அறிந்த ரௌடி, அருணுக்கு முன்பாக முந்த நினைத்து அருண் மற்றும் அர்ஜுனை கொலை செய்ய வந்துள்ளனர். அப்போது, அர்ஜுன் கிடைக்காததால் அருண், சுரேஷ் ஆகியோர் கொலை செய்யப்பட்டுள்ளனர் என்பது தெரியவந்துள்ளது .8 பேர் கும்பலுக்கு அதிகாரிகள் வலைவீசி இருக்கின்றனர்.
இதையும் படிங்க: ரவுடி ராஜாவை சுற்றிவளைத்து கொடூர கொலை செய்த கும்பல்; சென்னையில் பரபரப்பு.!