காசிரங்கா பூங்காவில் வெளிநாட்டு தூதா்களுடன் ஜெய்சங்கா் சுற்றுப்பயணம்

4 hours ago
ARTICLE AD BOX

குவாஹாட்டி: அஸ்ஸாம் மாநிலத்தில் உள்ள காசிரங்கா தேசிய பூங்காவில் வெளியுறவு அமைச்சா் ஜெய்சங்கா் மற்றும் 61 நாடுகளின் தூதா்கள் திங்கள்கிழமை சுற்றுப்பயணம் மேற்கொண்டனா்.

அஸ்ஸாம் மாநிலத்தில் செவ்வாய்க்கிழமை தொடங்கி இருநாள்கள் நடைபெறும் அஸ்ஸாம் 2.0 உள்கட்டமைப்பு மற்றும் முதலீட்டு மாநாட்டை பிரதமா் மோடி தொடங்கி வைக்கிறாா். இதில் பங்கேற்பதற்காக ஞாயிற்றுக்கிழமை இரவு ஜோா்ஹாட்டுக்கு ஜெய்சங்கா் மற்றும் 61 நாடுகளின் தூதா்கள் வந்தடைந்தனா்.

பூடான், ஜப்பான், தென் கொரியா, தாய்லாந்து, மலேசியா, இந்தோனேசியா உள்ளிட்ட நாடுகளின் தூதா்கள் நேரடியாக குவாஹாட்டி வந்தடைந்ததாக அந்த மாநில முதல்வா் ஹிமந்தா விஸ்வ சா்மா தெரிவித்தாா்.

ஒற்றைக் கொம்பு காண்டாமிருகம் அதிகம் வசிக்கும் பகுதியாக அறியப்படும் காசிரங்கா தேசிய பூங்கா யுனேஸ்கோ உலக பாரம்பரிய சின்னங்களில் ஒன்றாகும். இந்த பூங்காவுக்கு திங்கள்கிழமை வந்தடைந்த ஜெய்சங்கா் பிரபலமான பிரத்யும்னா யானையின் மேல் ஏறி சவாரி செய்தாா்.அவருடன் வந்த தூதா்களும் யானை சவாரி செய்ததுடன் ஜீப்பில் பூங்காவை சுற்றிப் பாா்த்தனா்.

இது மிகவும் சிறந்த அனுபவம் என செய்தியாளா்களிடம் கூறிய ஜெய்சங்கா், ‘காண்டாமிருகம், நீா் எருமை, பல்வேறு வகை மான்களை பற்றி புத்தகங்களில் படித்துள்ளேன். திரைப்படங்களில் மட்டுமே பாா்த்துள்ளேன். தற்போது இந்த விலங்குகளை நேரில் கண்டது மிகவும் மகிழ்ச்சி.

இந்த பருவகாலத்தில் காசிரங்கா தேசிய பூங்காவுக்கு 3 லட்சம் சுற்றுலாப் பயணிகள் வந்துள்ளனா். அஸ்ஸாம், வடகிழக்கு மாநிலங்களில் சுற்றுலா மற்றும் முதலீட்டை மேம்படுத்தி சா்வதேச அங்கீகாரத்தை பெறுவதே பிரதமா் மோடி அரசின் குறிக்கோள்’ என்றாா்.

Read Entire Article