காங்கிரஸ் பெண் நிர்வாகி கொலை வழக்கு.. வெளியான அதிர்ச்சி சிசிடிவி காட்சி..!!

3 hours ago
ARTICLE AD BOX

ஹரியானா மாநிலம் ரோக்தக் மாவட்டத்தைச் சேர்ந்த 23 வயது காங்கிரஸ் பெண் நிர்வாகி கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த நிலையில் இச்சம்பவம் குறித்த அதிர்ச்சி சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது.

ஹரியானா மாநிலம் ரோஹ்தக் – டெல்லி நெடுஞ்சாலையில் உள்ள ஒரு பேருந்து நிலையத்தில் சந்தேகத்திற்கு இடமான மர்ம சூட்கேஸ் ஒன்று இருந்துள்ளது. இதனை கண்ட அப்பகுதி மக்கள், உடனடியாக இது குறித்து போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். தகவல் அறிந்து விரைந்து வந்த போலீசார், அந்த சூட்கேஸை திறந்து பார்த்துள்ளனர்.

அதில், இளம்பெண் ஒருவரின் சடலம் இருந்துள்ளது. இதனை கண்டு அதிர்ச்சியடைந்த போலீசார், அந்த உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்த தொடங்கினர். அந்த விசாரணையில், ஹரியானா காங்கிரஸ் கட்சியின் கிராமப்புற மாவட்ட துணைத் தலைவர் ஹிமானி நர்வால் (23) என்பது தெரியவந்தது. அவரின் கொலை, மாநிலம் மட்டுமின்றி நாடு முழுக்க பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.

ஹிமாணியின் தாயார் செய்தியாளர்களிடம் கூறுகையில், “காங்கிரஸ் கட்சியில் ஹிமானி மிகப்பெரிய அளவில் முன்னேறி வந்தார். அவரின் வளர்ச்சி பலரின் கண்களை உறுத்தியது; இதற்குப் பின்னால் சில சூழ்ச்சிகள் உள்ளன. ஹிமானியின் மரணத்திற்கு நீதி கிடைக்க வேண்டும்” என்றார்.

இந்த நிலையில் ஹிமானியின் படுகொலை தொடர்பாக சச்சின் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடம் இருந்து பல்வேறு முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. ஹிமானியும் சச்சினும் தொடர்பில் இருந்ததாக போலீசார் தரப்பில் கூறப்படுகிறது. மேலும் இது தொடர்பாக முழுமையான விசாரணைக்கு பின்னர், தகவல்கள் தெரிவிக்கப்படும் என போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையில் சிசிடிவி காட்சி ஒன்று வெளியாகியுள்ளது. அந்தக் காட்சியில் ஹிமானி கொலைகள் சந்தேகிக்கப்படும் நபரான சச்சின், சூட்கேஸ் ஒன்றை இழுத்துச் செல்வது பதிவாகியுள்ளது. இந்த சூட்கேஸில் ஹிமானியின் உடல் இருந்ததாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது இந்த சிசிடிவி காட்சிகள் வைரலாகி வருகின்றன.

VIDEO | Himani Narwal murder case: CCTV footage – dated February 28, 2025 – shows accused Sachin carrying the black suitcase with the body stuffed in it, through a street. The CCTV visuals have been verified by the police.

Sachin – a "friend" of Congress worker Himani Narwal -… pic.twitter.com/f9qvKFR5rz

— Press Trust of India (@PTI_News) March 3, 2025

யார் இந்த ஹிமாணி நர்வால் : காங்கிரசின் இளம் நிர்வாகியான ஹிமானி, ராகுல் காந்தியின் பாரத் ஜோடோ யாத்திரையில் கலந்து கொண்டவர். ராகுல் காந்தியின் பாரத் ரோடு யாத்திரையில் கலந்து கொண்ட பின் அரசியல் ரீதியாக மிகப்பெரிய வெளிச்சத்திற்கு வந்தார் ஹிமானி. மேலும் அவர் தனது சமூக வலைதளங்களில் ராகுல் காந்தியுடன் பாரத் ஜோட யாத்திரையில் நடந்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களையும் பதிவிட்டு இருந்தார்.

Read more:மார்க் ஜுக்கர்பெர்க்கின் பழைய Hoodie ரூ.14 லட்சத்திற்கு ஏலம்!. பள்ளி குழந்தைகளுக்கு அர்ப்பணிப்பு!

The post காங்கிரஸ் பெண் நிர்வாகி கொலை வழக்கு.. வெளியான அதிர்ச்சி சிசிடிவி காட்சி..!! appeared first on 1NEWSNATION - Tamil News Online | Latest News in Tamil | Breaking News Tamil | Tamil News Live | தமிழ் நியூஸ் | Tamilnadu News.

Read Entire Article