ARTICLE AD BOX
கவின் பட இயக்குனருடன் ஹரிஷ் கல்யாண்.. இணைந்து நடிக்கும் பிக் பாஸ் பிரபலம்.. விவரங்கள் உள்ளே!!
நடிகர் ஹரிஷ் கல்யாண் தனது பிக் பாஸ் பயணத்திற்கு பிறகு ‘பியார் பிரேமா காதல்’ என்கிற படத்தில் நடித்து நல்ல வரவேற்பை பெற்றார். அதைத் தொடர்ந்து அவர் தரமான படங்களை தேர்வு செய்து நடித்து தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை பிடித்திருக்கிறார். மேலும், கடைசியாக இவர் நடித்த ‘லப்பர் பந்து’ திரைப்படமும் மாபெரும் வெற்றி பெற்றது. இந்நிலையில், இவரது அடுத்த படம் பற்றிய தகவல் ஒன்று கிடைத்திருக்கிறது. அது பற்றி கீழே காண்போம்.
துருவ நட்சத்திரம் படத்தில் சூப்பர் ஸ்டாரா..? கடைசி நேரத்தில் GVM-ன் காலை வாரிவிட்ட ரஜினி..
அதாவது, கவினை வைத்து ‘லிப்ட்’ என்கிற படத்தை இயக்கி நல்ல வரவேற்பை பெற்ற வினித் வரபிரசாத் தான் ஹரிஷ் கல்யாணின் அடுத்த படத்தை இயக்க உள்ளதாக தகவல் கிடைத்திருக்கிறது. மேலும், இந்தப் படத்தில் பிக் பாஸில் கலந்து கொண்ட அமீரும் ஹரிஷ் கல்யாணுடன் இணைந்து நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. தற்போது இந்த செய்தி இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.
The post கவின் பட இயக்குனருடன் ஹரிஷ் கல்யாண்.. இணைந்து நடிக்கும் பிக் பாஸ் பிரபலம்.. விவரங்கள் உள்ளே!! appeared first on EnewZ - Tamil.