இது உண்மை அல்ல.. பஞ்சாபில் தமிழக வீராங்கனைகள் பாதுகாப்பாக உள்ளனர்..!! – தமிழ்நாடு அரசு விளக்கம்

7 hours ago
ARTICLE AD BOX

பல்கலைக்கழகங்களுக்கு இடையேயான 2024 – 2025 கபாடி போட்டிகள் பஞ்சாப் மாநிலத்தில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் தமிழ்நாட்டில் இருந்து பாரதியார் பல்கலைக்கழகம், பெரியார் பல்கலைக்கழகம், அன்னை தெரசா பல்கலைக்கழகம், அழகப்பா பல்கலைக்கழகத்தை சேர்ந்த கபாடி வீராங்கனைகள் பங்கேற்று இருந்தனர். காலையில் போட்டிகள் தொடங்கிய நிலையில் விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது.

காலை சுமார் 10:00 மணிக்கு மேல் அன்னை தெரசா பல்கலை., பீகாரின் தர்பங்கா பல்கலைக்கழக அணியினர் இடையே போட்டி நடந்தது. அப்போது, பவுல் பிளே தொடர்பாக பீகார் வீராங்கனைகள் குறித்து தமிழக வீராங்கனைகள் புகார் தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த பீகார் வீராங்கனை ஒருவர், தமிழக வீராங்கனை மீது தாக்குதல் நடத்தியுள்ளார். அதுவும் இருக்கைகளை கொண்டு தாக்கியுள்ளனர்.

இதனால் ஆத்திரமடைந்த பிற தமிழக வீராங்கனைகள் வாக்குவாதம் செய்ய, நடுவருக்கு ஆதரவாக பீகார் தர்பங்கா பல்கலை., மாணவிகள் வந்துள்ளனர். இதனால் ஏற்பட்ட வாக்குவாதம் மோதலாக உருவாகவே, அங்கு பீகார் – தமிழ்நாடு கபடி வீராங்கனைகள் மோதல் சம்பவத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு சூழல் உண்டாகியது.

இந்த நிலையில் இந்த விவகாரம் குறித்து தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது. பஞ்சாப்பில் கபடி போட்டிக்கு சென்ற தமிழகத்தை சேர்ந்த பல்கலைக்கழக மாணவிகள் பாதுகாப்பாக உள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. தமிழகத்தை சேர்ந்த கபடி பயிற்சியாளர் பஞ்சாப்பில் கைது செய்யப்பட்டதாக வெளியான தகவலில் உண்மை இல்லை என்று தமிழக அரசு குறிப்பிட்டுள்ளது. பஞ்சாப்பிற்கு கபடி விளையாடச் சென்ற தமிழக மாணவிகளை பத்திரமாக தமிழகம் அழைத்து வர துணை முதலமைச்சர் உதயநிதி நடவடிக்கை எடுத்து வருவதாகவும் தமிழக அரசு கூறியுள்ளது.

Read more ; குளிர் சாதனை பெட்டியில் எந்தெந்த காய்கறிகளை எந்த இடத்தில் வைக்க வேண்டும்..?

The post இது உண்மை அல்ல.. பஞ்சாபில் தமிழக வீராங்கனைகள் பாதுகாப்பாக உள்ளனர்..!! – தமிழ்நாடு அரசு விளக்கம் appeared first on 1NEWSNATION - Tamil News Online | Latest News in Tamil | Breaking News Tamil | Tamil News Live | தமிழ் நியூஸ் | Tamilnadu News.

Read Entire Article