ARTICLE AD BOX
மகாசமுந்த்,
சத்தீஷ்காரின் மகாசமுந்த் மாவட்டத்தில் சராய்பாலி நகரருகே பயணிகளை ஏற்றியபடி சென்ற பஸ் ஒன்று சாலையில் நின்றிருந்த லாரி மீது மோதி விபத்திற்குள்ளானது.
இந்த சம்பவத்தில், 6 மாத பெண் குழந்தை ஒன்று பலியானது. 43 பயணிகள் காயமடைந்தனர். இந்த விபத்துக்கு முதல்-மந்திரி விஷ்ணு தியோ சாய் இரங்கல் தெரிவித்து உள்ளார்.
தொடர்ந்து அவர் கூறும்போது, காயமடைந்த நபர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. சிறந்த மருத்துவ வசதிகளை செய்து தரும்படி நிர்வாகத்திற்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டு உள்ளது என்றும் தெரிவித்து உள்ளார்.
Related Tags :