ARTICLE AD BOX

நடிகை சமந்தா தெலுங்கு நடிகர் நாகசைதன்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். அதன் பிறகு இருவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து விட்டார்கள். பின்பு நாக சைதன்யா சோபிதாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பின் நாக சைதன்யா தன்னுடைய இரண்டாவது மனைவி சோபிதா துலிபாலாவோடு புகைப்படங்களை வெளியிட்டால் அதனை பார்த்து ரசிகர்கள் ட்ரோல் செய்து வருகிறார்கள். இருவரும் அவ்வப்போது வெளியே சுற்றி வருகிறார்கள்.
இதுகுறித்த புகைப்படங்களையும் சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டு வருகிறார்கள். அந்தவகையில் தற்போது போட்டோஷூட் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்கள். அதில் சோபிதாவின் ஆடை பலரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. அதாவது சோபிதா அக்ல் பிராண்டின் வெள்ளி நிற டாசல் கொண்ட ஸ்லிப் உடையை அணிந்திருந்தார் அதன் விலை சுமார் ரூ.49,593 ஆகும்.