ARTICLE AD BOX
மூதாட்டியின் முகத்திலிருந்த 1 கிலோ 300 கிராம் எடை கொண்ட கட்டியை அகற்றி கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவர்கள் சாதனை படைத்துள்ளனர்.
சங்கராபுரம் அருகேயுள்ள வடசெட்டியந்தல் கிராமத்தை லட்சுமி என்பவரின் முகத்தில் ஒராண்டுக்கு முன் வந்த கட்டி முகத்தையே மாற்றியதால் வீட்டை விட்டு எங்கும் செல்ல முடியாமல் தனித்திருக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டார். பெங்களூரில் உள்ள தனியார் மருத்துவமனை வரை சென்ற நிலையிலும் சர்க்கரை நோய் இருப்பதால் அறுவை சிகிச்சை செய்ய மருத்துள்ளனர்.
கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு வந்த போது கண் மருத்துவர் நேரு, அறுவை சிகிச்சை பிரிவு மருத்துவர்கள் கோபிநாத், அன்பு, தமிழ்ச்செல்வன் மற்றும் மயக்கவியல் நிபுணர் மகேந்திரவர்மன் ஆகியோர் வெற்றிகரமாக அறுவை சிகிச்சை செய்து கட்டியை அகற்றினர்.