ARTICLE AD BOX
காலை நேரத்தில் அவசரமாக தோசை சுடும் போது, அவை கல்லில் ஒட்டிக் கொண்டால் பெரும் தலைவலியாக இருக்கும். ஒட்டிக் கொண்ட தோசையை கல்லில் இருந்து நீக்கி விட்டு, மீண்டும் தோசை சுடும் போது, அதுவும் ஒட்டிக் கொள்ளும். இவ்வாறு கல்லில் ஒட்டிக் கொள்ளாமல் ஈஸியாக தோசை சுடுவது எப்படி என தற்போது காணலாம்.
தோசை மற்றும் சப்பாத்தி ஆகியவற்றை சுடுவதற்கு ஒரே கல் பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும். இரண்டையும் ஒரே கல்லில் சுட்டு எடுத்தால் தோசை அடிக்கடி ஒட்டிக் கொள்ளும். இதேபோல், தோசை கல்லை நீண்ட நேரமாக அப்படியே சூடாக வைத்திருக்கக் கூடாது. இப்படி செய்தாலும் தோசை மாவு கல்லுடன் ஒட்டிக் கொள்ளும்.
மேலும், கல்லில் தோசை ஒட்டிக் கொள்ளும்பட்சத்தில் அதனை தவிர்ப்பதற்கான வழிமுறைகளை தற்போது பார்க்கலாம். ஒரு சிறிய காட்டன் துணியில் நெல்லிக்காய் அளவிற்கு புளியை எடுத்துக் கொள்ள வேண்டும். புளி சுற்றியிருக்கும் துணியை, தோசை சுடுவதற்கு பயன்படுத்தும் எண்ணெய்யில் நன்றாக தேய்த்து எடுத்துக் கொள்ள வேண்டும்.
இதைக் கொண்டு தோசைக் கல்லின் அனைத்து பகுதிகளிலும் படும்படி தடவ வேண்டும். குறிப்பாக, தோசைக் கல்லை நன்றாக கழுவிய பின்னர், அது காய்ந்ததும் புளி கொண்டு தடவ வேண்டும். இதையடுத்து, சிறிய துண்டு வெங்காயத்தை எடுத்து தோசைக் கல் முழுவதும் தேய்க்க வேண்டும்.
இதன் பின்னர், தோசை சுடும் போது கல்லில் ஒட்டாமல் ஈஸியாக வரும். மேலும், இந்த டிப்ஸை பின்பற்றினால் தோசை கிரிஸ்பியாகவும் வரும். எனவே, சிம்பிளான இந்த ட்ரிக்ஸை பயன்படுத்தி வீட்டிலேயே சூப்பராக தோசை சுடலாம்.
நன்றி - Southindian Homemaker Tamil Youtube Channel