கல்யாணமாகி அடுத்த மாசமே பிரிஞ்சிட்டோம் “என்னை விட்டுடுங்க”…. கதறும் ரன்யா ராவின் கணவர்..!!

11 hours ago
ARTICLE AD BOX

தங்கக்கடத்தல் வழக்கில் கைதாகிய ரன்யா ராவிடம் தொடர்ந்து வருவாய் புலனாய்வுத்துறை அதிகாரிகளால் விசாரணை நடந்து வருகிறது. இந்த நிலையில்  இவருடைய கணவர் ஜதீன் தனக்கு விதிவிலக்கு கொடுக்குமாறு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். என் மகளுக்கு கடந்த வருடம் நவம்பர் மாதம் திருமணம் நடந்தது. திருமணத்திற்கு பிறகு அவர் எங்களை சந்தித்து பேசுவதே இல்லை என்று தந்தை டிஜிபி ராமச்சந்திர ராவ் தெரிவித்திருந்தார். இதனை அடுத்து வருவாய் புலனாய்வு துறை அதிகாரிகளின் கவனமானது ஜதீன் பக்கம் திரும்பியது.

இதனையடுத்து அவரை வருவாய் புலனாய்வுத் துறை அதிகாரிகள் கைது செய்த நிலையில் இதிலிருந்து  விதிவிலக்கு அளிக்குமாறு கர்நாடக உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். இவர்கள் இருவருக்கும் 2024 ஆம் வருடம் நவம்பர் மாதம் திருமணம் நடந்த போதும் தனிப்பட்ட பிரச்சினையால் டிசம்பர் மாதமே இருவரும் பிரிந்து விட்டோம் என தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் இவர்கள் இருவரும் பிரிந்ததற்கான அதிகாரப்பூர்வ ஆதாரம் இல்லை. இந்த நிலையில் ஜதீனின் மனுவை ஏற்க கூடாது என்று வருவாய் புலனாய்வு துறை அதிகாரிகள் மார்ச் 24ஆம் தேதி நீதிமன்றத்தில் எதிர்ப்பு தெரிவிக்க இருக்கிறார்கள்.

Read Entire Article