ARTICLE AD BOX
காவடி மூலம் சௌந்தரபாண்டிக்கு சண்முகம் வைத்த செக்மேட்.. அனல் பறக்கும் திருப்பங்களுடன் - அண்ணா சீரியல் இன்றைய எபிசோட் அப்டேட்
அண்ணா சீரியலின் நேற்றைய எபிசோடில் சண்முகம் காவடி எடுக்க தயாரான நிலையில் இன்று, சௌந்தரபாண்டி சண்முகம் காவடி தூக்கியதும் அவன் காலை கழுவி பூஜை பண்ணுவாங்க, அந்த தண்ணில ஆசிடை கலந்து விட சொல்கிறார். இதனால் சண்முகத்தின் கால் வெந்து போய் காவடி எடுக்க முடியாது என கணக்கு போடுகிறார்.
மறுபக்கம் உடன்குடி இரண்டாவது காவடியும் ரெடியாகி விட்டதாக சொல்ல முத்துப்பாண்டி இரண்டாவது காவடி யாருக்கு என கேட்கிறான், கொஞ்ச நேரம் பொறுங்க உங்களுக்கே தெரியும் என சொல்கிறான். சௌந்தரபாண்டி இங்கு வந்து இறங்குகிறார். ரவுடிகளுக்கு தண்ணீரில் ஆசிடை கலக்க சொல்லி கண் காட்டுகிறார். அடுத்து இரண்டாவது காவடி யாருக்கு என்று கேட்க சண்முகம் உங்களுக்கு தான் என்று சொல்ல சௌந்தரபாண்டி நான் எதுக்கு காவடி எடுக்கணும்? அதெல்லாம் எடுக்க முடியாது என்று சொல்கிறார்.
மாமா நானே எடுக்கிறேன், உங்க வீட்டு வாரிசுக்காக நீங்க எடுக்க மாட்டீங்களா என்று மடக்குகிறான். மேலும் சாமியாரை பார்த்து கண் காட்ட அவர் சாமி வந்து ஆடி நீ அலகு குத்தி காவடி எடுத்து என் எல்லைக்கு வரணும், அப்போது அந்த குழந்தைக்கு எந்த ஆபத்தும் வராது என்று வாக்கு கொடுக்க சௌந்தரபாண்டி ஷாக்.ஆகிறார். அவரை பிடித்து அலகு குத்தி காவடியை தூக்கி கொடுக்கின்றனர், அடுத்து சண்முகம் காவடியை வாங்க தயாராகுகிறான், இப்படியான நிலையில் அடுத்து நடக்கப்போவது என்ன என்பது குறித்து எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
வன்மத்தை கொட்டும் அண்ணி.. வெற்றியின் வாழ்க்கையில் நடக்கப்போவது என்ன? கெட்டிமேளம் இன்றைய எபிசோட் அப்டேட்
கெட்டிமேளம் சீரியலின் நேற்றைய எபிசோடில் துளசி சொன்ன ஐடியாவால் வெற்றியின் குடும்பத்தினர் மாப்பிள்ளை பார்க்கும் நிகழ்வை தள்ளி வைக்க மறுபக்கம் மகேஷ் அஞ்சலியை கிண்டல் செய்தவர்களை ஆக்சிடென்ட் செய்த நிலையில் இன்று, லட்சுமி வீட்டில் பாட்டி இதுவரை சேர்த்து வைத்த பணத்தை எடுத்து வந்து என் புள்ள தனி ஆளாக இந்த குடும்பத்தை பார்க்கிறான். என்னால முடிந்தது இது என்று கொடுக்க லட்சுமி எதுக்கு அத்தை இதெல்லாம்? அதான் துளசி, முருகன் வேலைக்கு போறாங்களே என்று சொல்கிறாள். ஆனால் பாட்டி இந்தா புடி என பணத்தை கொடுக்கிறார்.
இதையடுத்து இங்கே மீனாட்சி வெற்றியிடம் நேத்து எனக்கு என்னமோ சாதாரணமா காய்ச்சல் வந்தா மாதிரி தெரியலையே என்று சொல்ல வெற்றி எதையோ சொல்லி சமாளிக்க முயற்சி செய்து முடியாமல் கடைசியில் என் ப்ரண்ட் கொடுத்த ஐடியா என்று சொல்லி நகர்கிறான், பிறகு மீனாட்சி இந்த குடும்பத்துக்கு செட்டே ஆகாத அந்த துளசியை தான் வெற்றி கல்யாணம் பண்ணிக்கணும் என்று தனது திட்டத்தை நினைத்து பார்க்கிறாள்.
அடுத்ததாக அஞ்சலி கிச்சனில் வேலை பார்த்து கொண்டிருக்க மகேஷ் பின்னாடி வந்து கட்டியணைத்து ரொமான்ஸ் செய்ய முயற்சி செய்ய ஒரு பெண் சென்செக்ஸ் எடுக்க வந்திருப்பதாக சொல்லி கேள்வி மேல் கேள்வி கேட்க மகேஷ் உச்சகட்ட டென்ஷன் ஆகிறான், எனக்கும் என் அஞ்சலிக்கும் இடையில் யாருமே வர கூடாது என மைண்ட் வாய்ஸில் சொல்கிறான்.
மறுபக்கம் பேங்கில் ரகுராம் கவிதா ஆகியோர் கேசவனை பார்த்து ஒளிந்து கொள்கின்றனர். ஈஸ்வர மூர்த்தியின் ரெகமண்ட் காரணமாக கேசவனுக்கு லோன் கிடைக்கிறது. அடுத்து லட்சுமி பூ வேண்டும் என்று சொல்ல முருகன் அவளை சைக்கிளில் உட்கார வைத்து ரேவதி கடைக்கு அழைத்து செல்கிறான். ரேவதி முருகனை பார்த்ததும் எதுக்கு என்ன எப்ப பார்த்தாலும் முறைத்து முறைத்து பார்க்குற? உனக்கு இதே தான் வேலையா என்று கோபப்படுகிறான்.
லட்சுமி அவனுக்கு வாய் பேச வராது, காதும் கேட்காது. உதடு அசைவை வைத்து தான் பேசுவதை தெரிந்து கொள்வான் என்ற உண்மையை சொல்ல ரேவதி வருத்தமடைகிறாள். அதன் பிறகு ரேவதி முருகனிடம் மன்னிப்பு கேட்டு அவனுடன் நட்பை உருவாக்கி கொள்கிறாள். இப்படியான நிலையில் அடுத்து நடக்கப்போவது என்ன என்பது குறித்து எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
மணமேடையில் அதிர்ச்சி கொடுத்த ரேவதி.. அதிரடி என்ட்ரி கொடுக்கும் சாமுண்டீஸ்வரி - அண்ணா சீரியல் இன்றைய எபிசோட் அப்டேட்
கார்த்திகை தீபம் சீரியலின் நேற்றைய எபிசோடில் கார்த்திக் சாமுண்டீஸ்வரியை அடைத்து வைத்திருக்கும் குடோனை நெருங்கிய நிலையில் இன்று, கார்த்திக் சாமுண்டீஸ்வரியை கடத்திய சண்டையிட்டு அவளை காப்பாற்றுகிறான். மறுபக்கம் ரேவதி மணமேடை ஏற்றப்பட்ட நிலையில் மகேஷ் தாலி கட்ட வரும் சமயத்தில் ரேவதி தடுத்து நிறுத்துகிறாள்.
எல்லா நல்லது கெட்டதிலும் அம்மா இருப்பாங்க, அம்மா இல்லாமல் எப்படி கல்யாணம் பண்ணிக்கிறது? அரை மனதோடு நான் ஒப்பு கொண்டதாக அதிர்ச்சி கொடுக்கிறாள். சந்திரகலா ஒரு பக்கம் மாயா ஒரு பக்கம் மகேஷ் ஒரு பக்கம் என ஆளாளுக்கு ரேவதியை சமாதானம் செய்து கல்யாணத்தை நடத்தி வைத்து விட முயற்சி செய்கின்றனர். ஆனால் ரேவதி அம்மா இல்லாமல் முடியாமல் என தனது முடிவில் உறுதியாக இருக்கிறாள்.
ஒரு கட்டத்தில் அய்யரும் நல்ல நேரம் முடிந்து விட்டதாக சொல்ல மாயா, சந்திரகலா ஆகியோர் அதிர்ச்சி அடைகின்றனர். மேலும் இந்த நேரத்தில் சாமுண்டீஸ்வரியும் மண்டபத்திற்கு வந்து விடுகிறாள். இப்படியான நிலையில் அடுத்து நடக்கபோவது என்ன என்பது குறித்து எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.