கல்பனா சாவ்லா 2003ல் விண்வெளியில் இருந்து திரும்பியபோது நடந்த 'அந்த' பயங்கரம்!

18 hours ago
ARTICLE AD BOX

கல்பனா சாவ்லா 2003ல் விண்வெளியில் இருந்து திரும்பியபோது நடந்த 'அந்த' பயங்கரம்!

Delhi
oi-Mathivanan Maran
Subscribe to Oneindia Tamil

டெல்லி: விண்வெளிப் பயணங்கள் பற்றிய விவாதங்கள், எதிர்பார்ப்புகள், ஆய்வுகள என சிலாகிதங்கள் நடந்து கொண்டிருக்கின்றன.. இந்த தருணங்களில் எல்லாம் விண்வெளிப் பயணத்தில் காலடி வைத்த முதல் இந்திய வம்சாவளிப் பெண்ணான கல்பனா சாவ்லா நமது நினைவுகளுக்கு வராமல் போவது இல்லை.. தமிழ்நாடு அரசு கூட கல்பனா சாவ்லா விருது வழங்குகிறது அல்லவா.. யார் இந்த கல்பனா சாவ்லா? விண்வெளி பயணத்தில் என்ன சாதனை நிகழ்த்தினார்?

கல்பனா சாவ்லாதான், விண்வெளிக்கு பயணித்த முதல் இந்திய வம்சாவளி பெண். இந்தியாவின் ஹரியானா மாநிலத்தைச் சேர்ந்த பஞ்சாபி குடும்பத்தில் பிறந்தவர் கல்பனா சாவ்லா. சண்டிகர் பஞ்சாப் பொறியியல் கல்லூரியில்தான் வான்வெளிப் பொறியியல் கல்வியை கற்றார் கல்பனா சாவ்லா. பின்னர் அமெரிக்காவின் டெக்சாஸில் மேற்படிப்பை நிறைவு செய்து 1980களின் இறுதியில் நாசா- அமெரிக்காவின் விண்வெளி ஆய்வு மையத்தில் காலடி வைத்தார் கல்பனா சாவ்லா.

nasa kalapana chawla india

1990களின் நடுப்பகுதியில் இருந்து விண்வெளிப் பயணத்துக்கு தயாரானார் கல்பனா சாவ்லா. 1997-ம் ஆண்டு முதன் முதலாக விண்வெளிக்கு சென்று திரும்பினார் கல்பன்மா சாவ்லா. விண்வெளிக்கு சென்ற 2-வது இந்தியர் என்ற பெருமையைப் படைத்தார்; விண்வெளிக்கு சென்ற முதல் இந்திய பெண் என்ற சரித்திரத்தையும் எழுதினார் கல்பனா சாவ்லா எனும் தீரமங்கை.

2003-ம் ஆண்டும் இதேபோல கல்பனா சாவ்லா விண்வெளிக்குப் பயணப்பட்டார். ஆனால் கல்பனா சாவ்லாவின் இறுதிப் பயணம் அதுவாகவே இருக்கும் என யாரும் நினைக்கவும் இல்லை.. விண்வெளியில் இருந்து பூமிக்கு திரும்பிக் கொண்டிருந்தது கல்பனாவின் விண்கலம்.. பூமியை தொட்டுவிடும் தொலைவில் வந்த நிலையில் திடீரென அந்த விண்கலம் வெடித்துச் சிதறியது.. ஒட்டுமொத்த உலகமே அப்படியே மூச்சடைத்து போன தருணம் அது.. விண்கலத்தில் இருந்த 7 விண்வெளி வீரர்களும் வீரமரணம் அடைந்தனர். உலகமே மிகப் பெரும் அதிர்வுக்குள்ளானது; ஒட்டுமொத்த இந்திய தேசமும் பெருந்துயரில் கண்ணீரில் மூழ்கியது.

அமெரிக்கா முதல் தென்கோடி இந்தியாவின் குமரி முனை வரை ஏதோ ஒரு நாட்டில் ஏதோ ஒரு மூலையில் ஏதோ ஒன்றின் பெயரில்,. அதாவது தெருக்களின் பெயரில், உதவித் தொகைகளின் பெயரில், விருதுகளின் பெயரில்.. இன்னமும் அதி உச்சமாக விண்வெளியில் சிறுகோள் ஒன்றின் பெயரை தாங்கியவராக நம் கல்பனா சாவ்லா நம்மில் இன்னமும் வாழ்கிறார்! அதனால்தான் விண்ணில் இருந்து இறங்கிய இந்திய தாரகை கல்பனா சாவ்லா விண்வெளியில் கரையவில்லை.. இதயங்களில் கரைந்து நிற்கிறார் என்கின்றன வரலாற்றின் பக்கங்கள்!

More From
Prev
Next
English summary
Discussions, expectations, and research on space travel continue to take place. In such moments, we cannot help but remember Kalpana Chawla, the first woman of Indian origin to set foot in space. Even the Government of Tamil Nadu honors her legacy by presenting the Kalpana Chawla Award.
Read Entire Article