ARTICLE AD BOX

ரஜினி நடிப்பில் தயாராகிக் கொண்டிருக்கிறது கூலி திரைப்படம். லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் பிரம்மாண்டமாக தயாராகி வருகிறது கூலி திரைப்படம். இந்தப் படத்தில் ரஜினியுடன் அமீர்கான், நாகர்ஜூனா, சத்யராஜ், சுருதிஹாசன் போன்ற பெரிய பெரிய நடிகர்கள் நடித்து மல்டி ஸ்டார் படமாக உருவாகி வருகிறது. ரஜினியின் நடிப்பில் கடைசியாக வேட்டையன் திரைப்படம் வெளியாகி பெரிய கலெக்ஷனை அள்ளியது.
அதற்கு அடுத்தபடியாக கூலி திரைப்படமும் பெரிய வசூலை அள்ள தயாராகிக் கொண்டிருக்கிறது. இந்தப் படத்தின் டிஜிட்டல் உரிமை 120 கோடிக்கு விற்கப்பட்டதாக தகவல் கிடைத்துள்ளது. அமேசான் நிறுவனம் இதன் டிஜிட்டல் உரிமையை வாங்கியிருக்கிறதாம். அதுவும் இதற்கு முன் 2.0 படம் 110 கோடிக்கு விற்கப்பட்டதாம். அந்த சாதனையை இப்போது கூலி திரைப்படம் முறியடித்திருக்கிறது.
கூலி படத்தின் படப்பிடிப்பில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் லோகேஷின் பிறந்த நாளின் போது வெளியானது. அதுவும் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. இந்த நிலையில் படத்தின் ரிலீஸ் தேதி குறித்த தகவல் தற்போது கிடைத்துள்ளது. ரிலீஸ் தேதியில் குழப்பம் இருந்தாலும் கண்டிப்பாக ஆகஸ்ட் 14 ஆம் தேதி படம் வெளியாகும் என கோடம்பாக்கத்தில் சில பேர் கூறி வருகிறார்கள்.
ஏனெனில் அந்த தேதிக்கு பிறகு சுதந்திர தினம், கிருஷ்ணஜெயந்தி என தொடர் விடுமுறை என்பதால் வசூல் எதிர்பார்த்ததையும் விட அதிகமாக இருக்கும் என சொல்லப்படுகிறது.
ரஜினி என்றாலே வசூல் மன்னன் தான் அனைவருக்கும் தெரியும். அவர் வந்து நின்றாலே மாஸ், நடந்தாலே மாஸ் எனும் போது பண்டிகை நாளில் அவர் படம் வரும் போது இன்னும் மாஸாகத்தான் இருக்க போகிறது.