ARTICLE AD BOX
கர்ப்ப காலத்தில் பெண்கள் மேக்கப் போடலாமா..?? போடக்கூடாதா..?? கண்டிப்பா தெரிஞ்சிக்கோங்க..!!
இந்த நவீன காலகட்டத்தில் மேக்கப் என்பது தினசரி வாழ்க்கையில் அதிகரித்துக் கொண்டே தான் வருகிறது. நம் முன்னோர்களின் காலகட்டத்தில் எல்லாம் மேக்கப் என்பது கல்யாண நிகழ்ச்சிகள் மட்டும்தான் பார்க்க முடியும். ஆனால் இன்றோ அப்படி இல்லை வேலைக்கு ஏற்றார் போல தினசரி வாழ்க்கையில் மேக்கப் என்பது பெண்களுக்கு முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கிறது. இந்நிலையில் பெண்கள் கர்ப்பமாக இருக்கும் பொழுது மேக்கப் போடலாமா போடக்கூடாதா என்பதை பற்றி இந்த பதிவில் நாம் பார்க்கலாம்.
பெண்கள் கர்ப்பமாக இருக்கும் போது செயற்கையான பொருட்களை வைத்து குறிப்பாக மேக்கப் பொருட்களை பயன்படுத்தாமல் இருந்தாலே பெண்ணின் உடல் நலத்திற்கும் அவரது வயிற்றில் வளரும் குழந்தையின் நலத்திற்கும் மிகவும் நல்லது. இயற்கையாக தயாரிக்கப்படும் முகப்பூச்சிகளை மருத்துவரின் ஆலோசனையின் பேரில் பயன்படுத்துவது மிகவும் நல்லது. மேலும், லிப்ஸ்டிக் பதில் ரோஸ் எண்ணெய் பீட்ரூட் போன்றவற்றை பயன்படுத்துவது மிகவும் நல்லது. இயற்கை பொருட்களை வைத்து மேக்கப் செய்யலாம். க்ரீம் போன்றவற்றை பயன்படுத்தாமல் அவற்றிற்கு பதில் கடலை மாவு பாசிப்பயிறு மாவு போன்றவற்றை இயற்கையான முறையில் சிறிதளவு தண்ணீர் அல்லது பால் சேர்த்து கலக்கி முகத்தில் தடவி வரலாம். ஏனென்றால், கர்ப்ப காலத்தில் இருக்கும் பெண்கள் இந்த விஷயங்களை கவனமாக பார்ப்பது மிகவும் நல்லது. செயற்கை நிறங்களை அளிக்கும் மேக்கப் பொருட்களை தவிர்த்து இயற்கையான முறையில் வீட்டிலேயே கிடைக்கும் பொருட்களை வைத்து என்ன செய்ய முடியுமோ அதை செய்வது நல்லது. ஏனென்றால் மேக்கப் பொருட்களில் பெனாயிடிகள் மற்றும் காரியம் மற்றும் பாதரசம் போன்றவற்றை கலக்கப்பட்டு இருக்கும் என்பதால் அதனை உபயோகம் செய்யாமல் இருப்பது கர்ப்ப காலத்தில் மிகவும் நல்லது என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.