ARTICLE AD BOX
கான்பெர்ரா,
ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் பேட் கம்மின்ஸ் (வயது 31). இவரது தலைமையில் ஆஸ்திரேலிய அணி 2023 ஒருநாள் உலகக்கோப்பை மற்றும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பட்டங்களை வென்றது. பேட் கம்மின்ஸ் தனது நீண்ட நாள் காதலியான பெக்கி பாஸ்டனை கடந்த 2022ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார்.
இவர்களுக்கு ஆல்பி என்ற மகன் உள்ளார். இந்நிலையில், பெக்கி பாஸ்டன் 2வது முறையாக கர்ப்பம் அடைந்தார். இவருக்கு இந்த மாதம் குழந்தை பிறக்கும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. இதன் காரணமாக பேட் கம்மின்ஸ் இலங்கைக்கு எதிரான டெஸ்ட் தொடரில் கலந்து கொள்ளவில்லை. இந்நிலையில், பேட் கம்மின்ஸ் - பெக்கி பாஸ்டன் தம்பதிக்கு 2-வதாக பெண் குழந்தை பிறந்துள்ளது.
இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை பேட் கம்மின்ஸ் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இந்த குழந்தைக்கு எடித் மரியா போஸ்டன் கம்மின்ஸ் என பெயரிட்டுள்ளதாக அறிவித்துள்ளனர். இதையடுத்து பேட் கம்மின்ஸ் - பெக்கி பாஸ்டன் தம்பதிக்கு பல்வேறு தரப்பினரும் தங்களது வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.