ARTICLE AD BOX

பெங்களூரு,
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் பயிற்சியாளர் கேப்டன் ரவி சாஸ்திரி. இவர் தற்போது கிரிக்கெட் வர்ணனையாளராக செயல்பட்டு வருகிறார்.
இதனிடையே, கர்நாடக மாநிலம் உடுப்பி மாவட்டம் எர்லபடி கர்வலு கிராமத்தில் விஷ்ணுமூர்த்தி கோவில் என்ற இந்து மத வழிபாட்டு தலம் உள்ளது.
இந்நிலையில், இந்த விஷ்ணு கோவிலில் ரவி சாஸ்திரி இன்று சாமி தரிசனம் செய்தார். ரவி சாஸ்திரியின் பூர்வீகம் உடுப்பி மாவட்டமாகும். ரவி சாஸ்திரியின் தந்தை எர்லபடி கர்வலு கிராமத்தை சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.�