கர்நாடகா பந்த் LIVE: கர்நாடகாவில் தொடங்கிய முழு அடைப்பு போராட்டம்

3 hours ago
ARTICLE AD BOX

கர்நாடகா பந்த் LIVE: கர்நாடகாவில் தொடங்கிய முழு அடைப்பு போராட்டம்

Live
Bangalore
oi-Nantha Kumar R
Subscribe to Oneindia Tamil

பெங்களூர்: கர்நாடகா மாநிலம் பெலகாவி மாவட்டத்துக்கு மகாராஷ்டிரா உரிமை கோரி வருகிறது. இந்த பெலகாவி மாவட்டம் கர்நாடகா - மகாராஷ்டிரா எல்லையில் அமைந்துள்ளது. கடந்த பிப்ரவரி மாதம் கர்நாடகா அரசு போக்குவரத்து கழகத்துக்கு சொந்தமான பஸ்சில் பெலகாவியில் இருந்து பாலேகுந்திரி என்ற இடத்துக்கு சென்று கொண்டிருந்தது.

அப்போது பஸ்சில் இருந்த பெண் ஒருவர் மராத்தியில் பேசி டிக்கெட் கேட்டார். அதற்கு கண்டக்டர் மகாதேவ் ஹுக்கேரி, ‛‛எனக்கு மராத்தி மொழி தெரியாது. கன்னடத்தில் பேசுங்கள்'' என்று கூறினார்.

இது இருவருக்கும் இடையே வாக்கு வாதத்தை ஏற்படுத்தியது. அப்போது மராத்தி மொழி பேசுவோர் கண்டக்டர் மகாதேவ்
ஹுக்கேரியை தாக்கினர். இதனை கன்னட அமைப்பினர் கொந்தளித்ததோடு, கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இந்த சம்பவத்தை கண்டித்தும், பெலகாவியில் செயல்பட்டு வரும் மகாராஷ்டிரா ஏகிகிரண் சமிதி என்ற மராத்திய அமைப்பு உள்பட பிற அமைப்புகளை தடை செய்ய வேண்டும் என்றும், கர்நாடகா - மகாராஷ்டிரா எல்லையில் உள்ள பெலகாவி மாவட்டத்தில் கன்னட மக்களின் பாதுகாப்பு மற்றும் உரிமையை காக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி இன்று கன்னட அமைப்பினர் பெங்களூர் உள்பட மாநிலம் முழுவதும் பந்த் போராட்டத்தை அறிவித்துள்ளனர்.

இன்று காலை 6 மணிக்கு தொடங்கிய பந்த் போராட்டம் இன்று மாலை 6 மணி வரை 12 மணிநேரம் நடைபெற உள்ளது. இந்த பந்த் போராட்டம் குறித்த லைவ் அப்டேட்டுகள் வருமாறு:

Karnataka Bandh  Karnataka  Bangalore

Mar 22, 2025, 6:47 am IST

கர்நாடகாவில் காலை 6 மணிக்கு பந்த் போராட்டம் தொடங்கியது

பெலகாவியில் மராத்தி மொழி பேச வலியுறுத்தி கர்நாடகா கண்டக்டர் மீது தாக்குதல் நடத்தப்பட்டது

கண்டக்டர் மீதான தாக்குதல் சம்பவத்தை கண்டித்து கன்னட அமைப்புகள் இன்று பந்த் அறிவிப்பு

இன்றைய பந்த் போராட்டத்துக்கு கர்நாடகா அரசு சார்பில் ஆதரவு இல்லை

பெங்களூரில் வழக்கம்போல் அரசு பஸ்கள் இயங்கி வருகிறது

பெங்களூரில் ஹோட்டல்கள் குறைந்த அளவில் திறக்கப்பட்டுள்ளது

அசம்பாவித சம்பவங்களை தடுக்கும் வகையில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளன
6:47 AM, 22 Mar

More From
Prev
Next
English summary
Karnataka Bandh Today [கர்நாடகா பந்த் இன்று] LIVE Updates in Tamil: Get the latest updates on Karnataka Bandh today on March 22, 2025. Follow live coverage of the ongoing strike, roadblocks, government responses, and public reactions in tamil language at Oneindia Tamil.
Read Entire Article