மக்கள் ஆதரவில் பெருசு திரைப்படம்..!

5 hours ago
ARTICLE AD BOX

அறிமுக இயக்குநர் இளங்கோ ராம் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘பெருசு’.

இப்படத்தில் வைபவ், சுனில், பால சரவணன், ரெடின் கிங்ஸ்லி, முனீஸ்காந்த், நிஹாரிகா உள்ளிட்டோர் நடித்துள்ளனர். அருண்ராஜ் இசையமைத்துள்ளார்.

மரணப்படுக்கையில் இருந்த குடும்ப பெரியவரின் இறப்பில் நேரும் ஒரு சம்பவம் குறித்த துயர நகைச்சுவைக் கதையாக ’அடல்ட் காமெடி’ பாணியில் இப்படம் உருவாகியுள்ளது.

இந்தப் படம் மார்ச் 14 அன்று வெளியாகி ரசிகர்களிடையே நல்ல விமர்சனங்களைப் பெற்று வருகிறது.

சமீபத்தில் படத்தின் ஸ்னீக் பீக் விடியோ வெளியாகி கவனம் ஈர்த்தது. வைபவ்-க்கு இந்தப் படம் வெற்றிப்படமாக அமைந்துள்ளது.

கார்த்திக் சுப்புராஜின் ஸ்டோன் பென்ச் நிறுவனம் இணைந்து தயாரித்துள்ள இந்தப் படம் 2ஆவது வாரத்திலும் 150க்கும் அதிகமான திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.

Read Entire Article