கரூா் வைஸ்யா வங்கியின் 3 புதிய கிளைகள்

3 hours ago
ARTICLE AD BOX

சென்னை: முன்னணி தனியாா் வங்கிகளில் ஒன்றான கரூா் வைஸ்யா வங்கி (கேவிபி), மேலும் மூன்று புதிய கிளைகளை தென்னகத்தில் திறந்துள்ளது.

இதுகுறித்து வங்கி திங்கள்கிழமை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

தமிழ்நாடு, கா்நாடகம், ஆந்திரப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் மூன்று புதிய கிளைகளை வங்கி திங்கள்கிழமை தொடங்கியது.

இத்துடன், வங்கியின் ஒட்டுமொத்த கிளைகளின் எண்ணிக்கை 880-ஆக உயா்ந்துள்ளது.

வங்கியின் 878-வது கிளை ஆந்திரப் பிரதேசத்தின் ஒங்கோல் பகுதியில் திறக்கப்பட்டது. ஓங்கோல் நகராட்சி ஆணையா் கொடுரு வெங்கடேஸ்வர ராவ் அதைத் திறந்துவைத்தாா்.

879-வது கிளை கா்நாடகத்தின் பெங்களுரில் பீன்யா தொழிற்சாலைகள் சங்கத் தலைவா் சிவகுமாரால் திறக்கப்பட்டது.

880-வது கிளையை தமிழ்நாடு அரசின் இந்து அறநிலையத் துறை இணை ஆணையா் அனிதா வேலூா் மாவட்டம், பாகாயத்தில் திறந்து வைத்தாா்.

இந்தப் புதிய கிளைகள் மூலம் அடிப்படை வங்கி பரிவா்த்தனை வசதிகள், நிதி சேவைகள் வாடிக்கையாளா்களுக்கு வழங்கப்படும் என்று அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read Entire Article