ARTICLE AD BOX
Dry Fish : கருவாட்டில் பல ஊட்டச்சத்துக்கள் நிறைந்திருந்தாலும், உடலில் சில பிரச்சனை உள்ளவர்கள் இதை சாப்பிடவே கூடாது. அவர்கள் யார் யார் என்று இங்கு பார்க்கலாம்.
கருவாடு பலரும் விரும்பி சாப்பிடும் உணவுகளில் ஒன்றாகும். மீனை சாப்பிடும் அளவிற்கு கூட நாம் கருவாடை அதிகமாக சாப்பிட மாட்டோம். சிலர் அசைவமாக இருந்தாலும் கருவாட்டை சாப்பிட மாட்டார்கள். காரணம் அதிலிருந்து வரும் வாசனை அவர்களுக்கு பிடிப்பதில்லை. உங்களுக்கு தெரியுமா.. அசைவ உணவுகளில் அதிக கொழுப்பு சத்து இல்லாத உணவுகள் எதுவென்றால் அது கருவாடு மற்றும் மீதான். கருவாட்டில் 80-85 சதவிகிதம் வரை புரதச்சத்து உள்ளன.
- எலும்புகள் மற்றும் பற்களை உறுதிப்படுத்தும்.
- நோய் எதிர்ப்பு சக்தியை பலப்படுத்தக்கூடிய ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் இதில் அதிகமாக உள்ளன. எனவே சளி, இருமல் உள்ளவர்களுக்கு கருவாட்டுக் குழம்பு ரொம்பவே நல்லது.
- நீர்ப்பை, சினைப்பை, கருப்பை போன்ற பிரச்சனைகள் பெண்களுக்கு அதிகம் ஏற்படும் அவற்றை சரி செய்ய இது உதவும்.
- கருவாடு வாதம், பித்தம், ரத்த ஓட்டம் போன்ற பிரச்சினைகளை குணமாகும்.
- பாலூட்டும் பெண்கள் பால் சுறா கருவாடு சாப்பிட்டால் பால் உற்பத்தி அதிகரிக்கும்.
இதையும் படிங்க: வீடே மணக்கும் கிராமத்து கருவாட்டு குழம்பு... ஒருமுறை செய்ங்க.. திரும்பத் திரும்ப செய்வீங்க!
இதய நோய், செரிமான பிரச்சனை, சரும பிரச்சனை, சிறுநீரக பிரச்சனை போன்ற பிரச்சினை உள்ளவர்கள் கருவாடு சாப்பிடவே கூடாது. முக்கியமாக, இரத்தம் அழுத்தம் மற்றும் சர்க்கரை நோய் அதிகம் உள்ளவர்கள் கருவாட்டை தொட்டுக் கூட பார்க்கவே கூடாது. சரும பிரச்சனை அல்லது ஒவ்வாமை இருப்பவர்கள் கூட கருவாடு. மீறினால் தடிப்புகள், அரிப்பு, சொறி போன்ற பிரச்சினைகளை சந்திக்க நேரிடும்.
இதையும் படிங்க: நெத்திலி கருவாடு வறுவல்.. இப்படி செஞ்சி சாப்பிடுங்க.. டேஸ்டா இருக்கும்!
கருவாடு சாப்பிடும் போது மோர், தயிர், கீரை போன்ற உணவுகளை சாப்பிடக்கூடாது. இது உடலுக்கு தீங்கு விளைவிக்கும். சில சமயங்களில் புட்பாய்சன் ஆகிவிடும்.
இப்போதும் சாப்பிடாதே!
தலைக்கு எண்ணெய் தேய்த்து குளிக்கும் நாளில் கருவாடு சாப்பிட வேண்டாம். முக்கியமாக சைனஸ் தொல்லை, சளி, இருமல், ஆஸ்துமா பிரச்சனை இருப்பவர்கள் தலைக்கு எண்ணெய் தேய்த்து குளித்த பிறகு கருவாடு சாப்பிட்டால் பிரச்சினை மேலும் அதிகமாகும் என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.