ARTICLE AD BOX
முழங்கால் முட்டி, முழங்கை மற்றும் கணுக்கால் எலும்புகள் மீது தோன்றும் கருந்திட்டுக்களை நீக்க வீட்டிலேயே செய்யும் 5 எளிய வைத்தியக் குறிப்புகள்.
மேஜை நாற்காலியில் அமர்ந்து வேலை செய்பவர்களின் முழங்கைகளிலும், அடிக்கடி முட்டி போட்டும் சம்மணம் போட்டு அமர்ந்த நிலையிலும் வேலை செய்பவர்களுக்கு அந்த இடத்தின் சருமத்தில் அழுத்தம் உண்டாவதால் கருந்திட்டுக்கள் தோன்றுவது சகஜம். இதை நீக்க வீட்டிலேயே செய்யக்கூடிய 5 எளிய வைத்தியக் குறிப்புகளை இப்பதிவில் பார்க்கலாம்.
இறந்த செல்களை நீக்குதல்:
பாதிக்கப்பட்ட இடங்களில் உள்ள இறந்த செல்களை மிக மிருதுவான முறையில் நீக்கி விடுவதால் அங்கு புதிய, உடலின் இயற்கை நிறம்கொண்ட சருமம் தோன்றும். இதற்கு உப்பு, சர்க்கரை அல்லது மிருதுவான ஸ்க்ரப் கொண்டு எரிச்சல் உண்டாகாத வகையில் இறந்த செல்களை நீக்குதல் நன்மைதரும்.
எலுமிச்சை ஜூஸ்:
எலுமிச்சை ஜூஸ் இயற்கையாகவே ப்ளீச் பண்ணும் குணம் கொண்டது. ஃபிரஷ் எலுமிச்சை ஜூஸை கணுக்கால், முழங்கால்,
முழங்கை மீதுள்ள கரும்புள்ளிகள் மற்றும் திட்டுக்கள் மீது தடவி, பதினைந்து நிமிடங்கள் கழித்து கழுவிவிட கருமை நிறம் படிப்படியாக மறையத் தொடங்கும்.
தேங்காய் எண்ணெய்:
தேங்காய் எண்ணெய் சருமத்திற்கு நீரேற்றம் தரவும் ஊட்டச் சத்துக்கள் அளிக்கவும் உதவும். தேங்காய் எண்ணெயை லேசாக சூடாக்கி பாதிக்கப்பட்ட இடங்களில் தொடர்ந்து மசாஜ் செய்து வரும்போது, சருமம் நீரேற்றம் பெற்று ஸ்கின் டோனை (skin tone) மீட்டெடுக்க உதவும்.
ஆலூவேரா ஜெல்:
ஆலூவேரா ஜெல் சருமத்திற்கு இதமளிக்கவும், சருமத்தை மிருதுவாக்கவும் உதவக்கூடியது. ஃபிரஷ் ஆலூவேரா ஜெல்லை கருமை படர்ந்த இடங்களில் தடவி இருபது நிமிடங்கள் கழித்து கழுவிவிட நல்ல பலன் கிடைக்கும்.
மஞ்சள் தூள் பேஸ்ட்:
மஞ்சள் தூள் ஆன்டி இன்ஃபிளமேட்டரி மற்றும் சருமத்திற்கு பளபளப்பு தரக்கூடிய குணம் கொண்டது. மஞ்சள் தூளை பாலுடன் கலந்து பேஸ்ட் ஆக்கி கருமையடைந்த இடங்களின் மீது தடவி வைத்து பதினைந்து நிமிடங்கள் கழித்து வெது வெதுப்பான நீரினால் கழுவி விடுவதும் கருமை நிறம் மறைய சிறப்பான முறையில் உதவும்.
மேலே கூறிய வழிமுறைகளைப் பின்பற்றி கருமை நிறம் பெற்ற சருமத்தை இயற்கை நிறம் பெறச்செய்யலாமே.