கருணாநிதியின் தனிப்பிரிவு காவல் துறை அதிகாரி நெல்லையில் வெட்டி படுகொலை!

13 hours ago
ARTICLE AD BOX

கருணாநிதியின் தனிப்பிரிவு காவல் துறை அதிகாரி நெல்லையில் வெட்டி படுகொலை!

Thirunelveli
oi-Vishnupriya R
Subscribe to Oneindia Tamil

நெல்லை: நெல்லையில் ஓய்வு பெற்ற காவல் துறை அதிகாரி ஜாஹீர் உசேன் மர்ம நபர்களால் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து அங்குள்ள சிசிடிவி காட்சிகளை வைத்து போலீஸார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

நெல்லையில் வசித்து வருகிறார் ஜாஹீர் உசேன். இவர் ஓய்வு பெற்ற காவல் துறை அதிகாரியாவார். இவர் முன்னாள் முதல்வர் கருணாநிதி முதல்வராக இருந்த போதும் தற்போதைய முதல்வர் ஸ்டாலின் அமைச்சராக இருந்த போதும் தனிப்பிரிவு அதிகாரியாக பணியாற்றியிருந்தார்.

crime tirunelveli nellai

இவர் ரம்ஜான் பண்டிகையொட்டி நோன்பு தொழுகைக்காக மசூதிக்கு சென்றிருந்தார். அங்கு அதிகாலை தொழுகையை முடித்துக் கொண்டு வீட்டிற்கு வந்து கொண்டிருந்தார். அப்போது நெல்லை டவுன் காட்சி மண்டபம் அருகே அவரை மர்ம கும்பல் வழிமறித்தது.

இதையடுத்து ஜாஹீர் உசேனை அரிவாளால் வெட்டி படுகொலை செய்த கும்பல் அங்கிருந்த தப்பிச் சென்றது. இதுகுறித்து தகவலறிந்த போலீஸார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தி வருகிறார்கள். அது போல் அங்குள்ள சிசிடிவி கேமராக்களையும் ஆய்வு செய்து வருகிறார்கள்.

வக்ஃபு வாரியத்திற்கு சொந்தமான 32 சென்ட் நிலம் தொடர்பாக பிரச்சினை இருந்து வருவதாகவும் , அது தொடர்பாக வழக்கு நிலுவையில் இருப்பதாகவும் முதல் கட்டமாக ஒரு தகவல் வெளியாகியுள்ளது.

More From
Prev
Next
English summary
Nellai Ex police officer Jakir Hussain murdered today after his Ramzan prayers.
Read Entire Article