ARTICLE AD BOX
லண்டன்: பிரிட்டனில் புகழ்பெற்ற கராபோ எனப்படும் ஈஎப்எல் கால்பந்து சாம்பியன்ஷிப் போட்டியில், நியூகேசல் அணி 56 ஆண்டுக்கு பின் முதல் முறையாக அபார வெற்றி பெற்று கோப்பையை கைப்பற்றி உள்ளது. பிரிட்டனில் உள்ள புகழ் பெற்ற அணிகள் இடையே நடக்கும் கராபோ கால்பந்து சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு, நியூகேசல் அணியும், பலம் வாய்ந்த லிவர்பூல் அணியும் தகுதி பெற்றன. வெம்ப்லி ஸ்டேடியத்தில் நடந்த பரபரப்பான இறுதிப் போட்டியை காண பல்லாயிரக்கணக்கான ரசிகர்கள் திரண்டிருந்தனர். ஆட்டம் துவங்கிய நொடி முதல் இரு அணி வீரர்களும் கோல் அடிப்பதில் தீவிரம் காட்டினர். நியூகேசல் அணியின் டேன் பர்ன், அலெக்சாண்டர் ஐசக் இரண்டு கோல் அடித்து அணியை முன்னிலைப்படுத்தினர். லிவர்பூல் அணியின் முதல் கோலை அந்த அணி வீரர் பெடெரிகோ சீஸா அடித்தார். ஆட்ட முடிவில் நியூகேசல் அணி 2-1 என்ற கோல் கணக்கில் வெற்றி வாகை சூடியது. 56 ஆண்டுக்கு பின் அந்த அணி முதல் முறையாக கோப்பையை கைப்பற்றியது குறிப்பிடத்தக்கது.
The post கராபோ கால்பந்து சாம்பியன்ஷிப்: நியூகேசல் அணி சாம்பியன்; 56 ஆண்டுக்கு பின் சாதனை appeared first on Dinakaran.