கமல் வழியில் சிம்பு... இனிமே ஆட்டம் வெறித்தனமா இருக்கும்... ஆரம்பிக்கலாமா?..

2 hours ago
ARTICLE AD BOX

Actor Simbu: தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக ஜொலித்து வருபவர் நடிகர் சிம்பு.  அதிலும் மாநாடு திரைப்படத்திற்கு பிறகு தமிழ் சினிமாவில் தன்னுடைய செகண்ட் இன்னிங்ஸை தொடங்கியிருக்கின்றார். அதற்கு முன்பு வரை பல்வேறு பிரச்சனைகளில் சிக்கி தவித்து வந்த சிம்பு தற்போது தான் உண்டு தன் வேலையுண்டு என்று இருந்து வருகின்றார்.

மாநாடு திரைப்படத்திற்கு பிறகு சிம்பு நடிப்பில் வெளிவந்த வெந்து தணிந்தது காடு, பத்து தல போன்ற திரைப்படங்கள் நல்ல வரவேற்பை பெற்றது. இதனை தொடர்ந்து நடிகர் சிம்பு கமிட்டான திரைப்படம் தான் எஸ்டிஆர் 48. இந்த திரைப்படத்தை தேசிங்கு பெரியசாமி இயக்க இருப்பதாகவும் கமல்ஹாசனின் ராஜ்கமல் ஃபிலிம் இன்டர்நேஷனல் நிறுவனம் இப்படத்தை தயாரிக்க இருப்பதாகவும் தகவல் வெளியாகி வந்தது. ஆனால் அதன்பிறகு படத்தின் எந்த அப்டேட்டும் வெளியாகவில்லை. சில தினங்களுக்குப் பிறகு கமல்ஹாசன் நிறுவனம் இந்த திரைப்படத்தை தயாரிக்கவில்லை என்கின்ற அறிவிப்பு வெளியானது.


சிம்புவின் லைன்அப்: இருப்பினும் நடிகர் சிம்பு மணிரத்தினம் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் உருவாகி இருக்கும் தக் லைப் திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கின்றார். இதில் ஒரு கேங்ஸ்டர் கதாபாத்திரத்தில் நடித்திருப்பதாக கூறப்படுகின்றது. இதனை தொடர்ந்து நடிகர் சிம்பு அடுத்ததாக பார்க்கிங் திரைப்பட இயக்குனர் ராம்குமார் இயக்கத்தில் ஒரு புதிய திரைப்படத்தில் நடிப்பதற்கு கமிட்டாகி இருக்கின்றார்.

இந்த திரைப்படம் தான் எஸ்டிஆர் 48 என அறிவிக்கப்பட்டுள்ளது. அடுத்ததாக அஸ்வந்த் மாரிமுத்து இயக்கத்தில் எஸ்டிஆர் 49 என்கின்ற திரைப்படத்தில் நடிக்க இருக்கின்றார். இந்த இரண்டு திரைப்படங்களை முடித்துவிட்டு தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் சிம்பு நடிக்க இருக்கின்றார்.

சிம்புவின் தயாரிப்பு நிறுவனம்: தேசிங்கு பெரியசாமி கூறிய கதை நடிகர் சிம்புவுக்கு மிகவும் பிடித்திருந்த காரணத்தால் அப்படத்தை எடுத்தே தீர வேண்டும் என்கின்ற முயற்சியில் ஈடுபட்டிருக்கின்றார் சிம்பு. இதற்காக தயாரிப்பாளராகவும் களமிறங்கி இருக்கின்றார். நேற்று இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது.

ஆத்மன் சினிஆர்ட்ஸ் என்கின்ற தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கி அதில் இந்த திரைப்படத்தை தயாரிக்க இருப்பதாக அறிவித்திருக்கின்றார். இப்படம் மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவாக இருப்பதால் தானே தயாரிப்பதற்கு சிம்பு முன் வந்து இருப்பதாக கூறப்படுகின்றது. நேற்று முதல் இந்த தகவல் சமூக வலைதள பக்கங்களில் வைரலாகி வருகின்றது.

சிம்புவின் ஆடியோ : இந்நிலையில் நேற்று நடிகர் சிம்பு பேசிய ஆடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகின்றது. அதில் அவர் தெரிவித்ததாவது 'எஸ்டிஆர் 50 என்று திரைப்படத்தின் மூலமாக தனது தயாரிப்பு நிறுவனத்தை வெளியிடுவதில் பெரும் மகிழ்ச்சி. எங்களுக்கு தெரியாது இது ஒரு லாபகரமான முயற்சியாக இருக்குமா? இல்லையா? என்பது. நான் பல வருடங்களாக சினிமாவில் இருக்கின்றேன்.


சினிமாவிற்கு திரும்பி ஏதாவது தர விரும்புகின்றேன். இந்த படத்தின் மூலம் தனக்கு எவ்வளவு லாபம் வரும், நஷ்டம் வரும் என்பதை பற்றி கவலை இல்லை. நிச்சயம் என்னுடைய தமிழ் சினிமா ரசிகர்கள் இதை ஆதரிப்பார்கள் என்கின்ற நம்பிக்கையில் இறங்கி இருக்கின்றேன். அடுத்த மாதம் ஒரு புரோமோ சூட் செய்யப் போகின்றோம்.

அந்த சூட் நன்றாக வந்தால் நிச்சயம் வெளியிடுவோம் அதற்காகத்தான் இந்த கெட்டப்பில் இருந்து வருகின்றேன். படத்தின் பட்ஜெட் ரொம்ப பெரியது. OTT & சாட்டிலைட் மார்க்கெட் சரிந்து விட்டது. அதனால் தானே தயாரிக்கின்றேன். இது பாகுபலி போன்ற திரைப்படம் கிடையாது. ஆனால் தமிழ் சினிமாவை நிச்சயம் பெருமைப்படுத்துவேன்' என்று கூறி இருக்கின்றார்.

Read Entire Article